அத்தியாயம் 7: பாரம்பரியக் கல்வியின் பல்வேறு அம்சங்கள்
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 03rd November 2015 10:00 AM | Last Updated : 02nd November 2015 02:49 PM | அ+அ அ- |

உயர் கல்வியில் பயன்படுத்தப்பட்ட சில புத்தகங்கள்
வேதங்கள், பல்வேறு சாஸ்திரங்கள், புராணங்கள் இவை நீங்கலாக கணிதம், ஜோதிடம் காவிய இலக்கியம் போன்றவை கற்றுத் தரப்பட்டன. ராஜ முந்திரி கலெக்டர் தந்த அறிக்கை நீங்கலாக வேறு மாவட்டங்களில் இருந்து கிடைத்த ஆய்வறிக்கையில் பாடப் புத்தகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ராஜ முந்திரியைப் பொறுத்தவரையில் அங்கு கற்றுத் தரப்பட்ட பாட புத்தகங்களின் பெயர்கள்:
வேதங்கள்
ரிக்வேதம், யஜூர் வேதம், சாம வேதம், ஸ்ரௌதம், திராவிட வேதம்
இலக்கியம்
ரகுவம்சம், குமாரசம்பவம், மேக சந்தேசம், பாரவி, மகும், அர்த்த சாஸ்திரம், நயேஷதம்
சாஸ்திரங்கள்
சமஸ்கிருத இலக்கணம், சிந்தாந்த கௌமுதி, தர்க்கம், ஜோதிடம், தர்ம சாஸ்திரம்
காவியங்கள்
ராஜ முந்திரியில் பாரசீகம் கற்றுத் தரப்பட்ட பள்ளிகளும் இருந்தன. பாரசீக, அரபு மொழிப் புத்தகங்கள் பட்டியலும் தரப்பட்டுள்ளன.
ராஜ முந்திரி பள்ளிகளில் கற்றுத் தரப்பட்ட பாரசீக மொழி புத்தகங்கள்
கரமே அகமதுனாமா, ஹர்கரம், இன்ஷா காலிஃபா மற்றும் கூல்ஸ்தான், பஹதுர்தனிஷ் மற்றும் பஸ்தன், அப்துல் ஃபாஸல் இன்ஷா, காலிஃபா, குர்ரான்
தனிக் கல்வி (அல்லது வீட்டில் கற்ற கல்வி)
எந்தவிதப் புள்ளிவிவர அறிக்கையும் அனுப்பாத கனரா கலெக்டர் உட்பட வேறு பல கலெக்டர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது, பல ஆண்கள் மற்றும் குறிப்பாகப் பெண் குழந்தைகள் வீடுகளில் தங்கள் பெற்றோரிடம் இருந்து அல்லது வீடுகளுக்கு வந்து கல்வி கற்றுத் தரும் ஆசிரியர்களிடமிருந்து கல்வி பெற்றிருக்கிறார்கள். உயர் கல்வியானது இதுபோன்ற அக்ரஹார இல்லங்களில் வழங்கப்பட்டதாக அந்த கலெக்டர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மலபார் மற்றும் மதராஸ் பகுதி கலெக்டர்கள் மட்டுமே அங்கு கற்றுத் தரப்பட்ட பாடங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மலபார் கலெக்டர் உயர் கல்வியில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் பற்றிய தகவலை அனுப்பியிருக்கிறார். மதராஸ் கலெக்டர் அப்படியான கல்வி பெற்ற ஆண், பெண்களின் எண்ணிக்கை பற்றி தகவல் சேகரித்து அனுப்பியிருக்கிறார். இந்தத் தகவல்கள் அட்டவணை 7- A மற்றும் 7- B யில் இடம்பெற்றிருக்கின்றன.
அட்டவணை 7- A
மலபாரில் 1823 வாக்கில் தனிப்பட்ட முறையில் உயர் கல்வி பெற்றவர்கள் பற்றிய விவரம்
வீடுகளில் தனி ஆசிரியர் மூலம் கல்வி பெறும் வழக்கம் பிற மாவட்டங்களிலும் இருந்திருக்கக்கூடும்; என்றாலும் உயர் கல்வி தொடர்பாக மலபாரில் இருந்து கிடைத்த தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, மலபாரில் மிக அதிகமாக இருப்பதற்கு அந்தப் பகுதிக்குரிய விசேஷ சமூக, வரலாற்று அம்சங்களே காரணம். அட்டவணை 7- A மற்றும் 7- B யைப் பார்க்கும்போது அதிக செல்வ வளம் இல்லாத சமுதிரின் ராஜாவின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஒற்றைக் கல்லூரியில் படித்தவர்களைப்போல் 21 மடங்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வீடுகளில் கல்வி பெற்றிருக்கிறார்கள். மலபாரில் கிடைத்த தரவுகள் 194 பேர் மருத்துவம் படித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏன் ஒவ்வொரு கிராமத்திலும்கூட ஒரு உள்ளூர் பாரம்பரிய வைத்தியர் இருந்திருக்கிறார். அவருடைய சமூக சேவைக்கான சம்பளமாக சில மானிய ஏற்பாடுகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து பிற மாவட்டங்களிலும் இதுபோல் மருத்துவக் கல்வி தரப்பட்டிருக்கும் என்று யூகிக்க இடமுண்டு.
பிற மாவட்டங்களில் வீடுகளில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை என்ன, ஆண் பெண் விகிதம் என்ன போன்றவையெல்லாம் யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடிந்தவையே. எனினும் இறையியல், சட்டம், வான சாஸ்திரம், தத்துவம், ஒழுக்கவியல், கவிதை, இலக்கியம், மருத்துவம், இசை, நடனம் போன்றவற்றை வீடுகளில் கற்றவர்களின் எண்ணிக்கை கல்வி மையங்களில் கற்றவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று யூகிப்பதில் நிச்சயம் தவறெதுவும் இருக்க வாய்ப்பில்லை.
மதராஸ் பிராந்தியத்தில் வீடுகளில் கல்வி கற்ற ஆண்கள் பெண்களின் எண்ணிக்கை மிகவும் துல்லியமாகத் தரப்பட்டிருக்கிறது. மதராஸில் இருக்கும் பள்ளிகளில் கற்றவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் வீடுகளில் கற்றவர்களின் எண்ணிக்கை 4.73 மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. இப்படி வீடுகளில் கல்வி பெற்றவர்களில் பாதிபேர் பிராமணர்கள், வைசியர்கள் ஆவர். எனினும் 28.7 சதவிகித சூத்திரர்களும் 13% பிற சாதியினரும் வீடுகளில் கல்வி பெற்றிருக்கின்றனர். மேலும் அந்தக் காலகட்டத்தில் மதராஸ் பகுதியானது ஒருவகையில் புதிதாக உருவான நகரம். இந்த பிரஸிடென்ஸியின் வேறு பாரம்பரிய ஊர்களை ஒப்பிடுகையில் மதராஸ் ஒழுங்காக ஒருங்கமைக்கப்படாத ஓர் பகுதி. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மனிதர்கள் தஞ்சாவூர், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் வசித்துவந்தவர்களைவிட சமூக அளவில் கொஞ்சம் தரம் குறைந்தவர்களாகவே கருதப்பட்டிருக்கிறார்கள். எனவே, அந்தப் பழைய பகுதிகளில் வீடுகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை மதராஸ் சிட்டிபோல் நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாக இல்லாவிட்டாலும் நிச்சயம் கணிசமாக அதிகமாக இருக்கும் என்று நம்பலாம்.
மெட்ராஸ் சிட்டியில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 26,903 என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் ஏதோ தவறு நடந்திருக்கும் என்று தாமஸ் மன்ரோ குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தை கல்வி தொடர்பாகப் பேசிய வேறு பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கூற்றில் எந்த நியாயமும் இல்லை. அந்த எண்ணிக்கை உண்மையிலேயே தவறானதாக இருந்திருந்தால், மதராஸ் பகுதிக்கு மட்டும் மறு கணக்கெடுப்பு நடத்துவது அப்படியொன்றும் சிரமமான காரியமே அல்ல. ஏனென்றால், கவர்னரின் இந்த கருத்து வெளியிடப்பட்டதற்கு ஒரு வருடத்துக்கு முன்னமேயே இந்த ஆய்வறிக்கை தயாரித்து அளிக்கப்பட்டுவிட்டது. நிர்வாக கமிட்டியின் தலைவராக இருந்ததால் தாமஸ் மன்ரோவுக்கு இப்படியான ஒரு விமரிசனத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது. லண்டன் தலைமை அப்படியான ஒரு கருத்தைக் கேட்கவே விரும்பியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் குறிப்போடு கூடவே வேறுசில கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார். இந்தப் பகுதியில் காணப்படும் கல்வியானது நம் நாட்டில் இருப்பதைவிடத் தரம் குறைந்ததாகவே இருக்கிறது. என்றாலும் பிற ஐரோப்பிய நாடுகளில் சம காலத்துக்கு சற்று முந்தைய காலகட்டங்களில் இருந்ததைவிட மேம்பட்டதாகவே இருக்கிறது. பிரிட்டனைப் பொறுத்தவரை ‘சம காலத்துக்கு சற்று முந்தைய’ என்பது பிரிட்டனில் பெரும்பாலான குழந்தைகளுக்கு டே ஸ்கூல்கள் ஆரம்பிக்கப்பட்ட 19-ம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தைக் குறிக்கிறது என்று யூகிக்கலாம்.
பெண்களின் கல்வி
முன்பே சொன்னதுபோல் கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கிறது. மலபார், விசாகப்பட்டணத்தில் ஜெய்பூர் பகுதிகள் நீங்கலாக பிராமண, செட்டியார், வைசியர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் யாருமே இந்தப் பள்ளிகளில் கல்வி கற்றதாகத் தெரியவில்லை. திருச்சியில் 56, சேலத்தில் 27 முஸ்லிம் பெண் குழந்தைகள் கல்வி கற்றிருக்கிறார்கள். கல்விபெற்ற சூத்திர, பிற சாதி இந்துக் குழந்தைகளின் எண்ணிக்கையும் அவ்வளவு ஒன்றும் அதிகமாக இல்லை. நடனப் பெண்கள் அல்லது கோவில்களில் தேவ தாசிகளாக இருந்த பெண்கள் கல்வி பெற்றதாக மசூலிப்பட்டணம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளின் கலெக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அட்டவணை 8 பள்ளிகளில் அல்லது வீடுகளில் கல்வி பெற்ற பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறது.
அட்டவணை 8
இடம் | பிராமணர் | வைசியர் | சூத்திரர் | பிற சாதியினர் | முஸ்லிம் | மொத்தம் |
மலபார் |
|
|
|
|
|
|
பெண்கள் | 5 | 13 | 707 | 343 | 1,122 | 2,190 |
ஆண்கள் | 2,230 | 84 | 3,697 | 2,756 | 3,196 | 11,963 |
ஆண்கள் பெண்கள் விகிதம் | - | 15.5% | 19.1% | 12.4% | 35.1% | 18.3% |
ஜெய்பூர் |
|
|
|
|
|
|
பெண்கள் | 94 | - | 71 | 64 | - | 229 |
ஆண்கள் | 254 | 38 | 266 | 213 | - | 771 |
ஆண்கள் பெண்கள் விகிதம் | 37% | - | 26.7% | 30% | - | 29.70% |
மலபார், விசாகப்பட்டணத்தில் ஜெய்பூர் ஜமீன் ஆகிய இடங்களில் நிலைமை முற்றிலும் வேறாக இருப்பதாக அட்டவணை 9 தெரிவிக்கிறது. அந்தப் பகுதிகளில் கல்வி கற்ற ஆண்கள் பெண்களின் எண்ணிக்கையை அட்டவணை எட்டு தெரிவிக்கிறது.
அட்டவணை 9
| பி ரா ம ண ர் க ள் | வை சி ய ர் க ள் | சூ த் தி ர ர் க ள் | பி ற சா தி யி ன ர் | மு ஸ் லி ம் க ள் | மொ த் த மா ண வி க ள் | மொத்த பெ ண் க ள்
| பிற வி வ ர ங் க ள் |
| - | - | 2 | 10 | - | 12 | 1,79,111 | - |
| 99 | - | 73 | 131 | - | 303 | 4,58,914 | - |
ஒரிய மொழி கஞ்சம் மாவட்டம் | 94 | - | 71 | 64 | - | 229 | 36,419 |
|
தெலுங்கு விசாகப் பட்டணம் | 3 | - | 6 | 28 | - | 37 | 3,44,796 |
|
ஜெய்பூர் | 1 | - | 1 | 29 | 2 | 33 | 2,40,683 | பெருமளவுக்கு ஆடல் மகளிர் |
ராஜமுந்திரி | 5 | - | 37 | 57 | 3 | 102 | 2,10,985 |
|
மசூலிப் பட்டணம் | - | - | 55 | - | 5 | 58 | 4,06,927 |
|
குண்டூர் | - | - | 68 | 39 | 1 | 108 | 5,15,999 |
|
நெல்லூர் |
|
|
|
|
|
|
|
|
கடப்பா | 2 | 1 | 26 | 31 | - | 60 | 4,38,184 |
|
கன்னடம் | - | - | 14 | - | - | 14 | 16,761 |
|
பெல்லாரி |
|
|
|
|
|
|
|
|
ஸ்ரீரங்க பட்டணம் |
|
|
|
|
|
|
|
|
மலையாளம் | 5 | 13 | 707 | 343 | 1,122 | 2,190 | 4,49,207 |
|
மலபார் | 3 | 5 | 19 | 14 | - | 41 |
|
|
பள்ளி | 3 | - | - | - | - | 3 |
|
|
வீடுகளில் உயர் கல்வி | - | 5 | 19 | 14 | - | 38 |
|
|
இறையியல், சட்டம் |
|
|
|
|
|
|
|
|
வான சாஸ்திரம் | 1 | - | 32 | 8 | 11 | 52 | 2,78,481 |
|
தமிழ் | - | - | 94 | 10 | - | 104 | 2,02,556 |
|
வட ஆற்காடு | 3 | - | 79 | 34 | - | 116 | 1,72,886 |
|
தென் ஆற்காடு | - | - | 125 | 29 | - | 154 | 1,87,145 |
|
செங்கல்பட்டு | - | - | 66 | 18 | 56 | 140 | 2,33,723 |
|
தஞ்சாவூர் | - | - | 65 | 40 | - | 105 | 3,86,682 | பெருமளவுக்கு ஆடல் மகளிர் |
திருச்சினாப் பள்ளி |
| - | - | 117 | 2 | 119 | 2,81,238 |
|
மதுரா (மதுரை) | - | - | 82 | - | - | 82 | 3,21,268 | கைக்கள ஆடல் மகளிர் |
சேலம் | - | - | 3 | 28 | 27 | 58 | 5,33,485 |
|
மதராஸ் சாதா பள்ளிகள் | 1 | 9 | 113 | 4 | - | 127 | 7,33,415 |
|
அறக் கட்டளைப் பள்ளிகள் | - | 2 | - | 47 | - | 49 |
|
|
வீடுகளில் படித்தவர்கள் | 98 | 63 | 220 | 136 | - | 517 |
|
|
ஜெய்ப்பூர் ஜமீன் பள்ளிகளில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 29.7% அதிகமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஆச்சரியப்படும்வகையில் பிராமண மாணவிகளின் எண்ணிக்கை பிராமண மாணவன்களின் எண்ணிக்கையைவிட 37% அதிகமாக இருந்தது. அதுபோலவே மலபார் பகுதியில் மாணவிகளின் எண்ணிக்கை மாணவன்களின் எண்ணிக்கையைவிட 35.1% அதிகமாக இருந்தது என்பதை உண்மையில் நம்பவே முடியவில்லை. வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் பிற சாதியிலும் கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிட முறையே 15.5 %, 19.1%, 12.4% என அதிகமாகவே இருந்திருக்கிறது. மேற்குக் கடற்கரையோரம் இருக்கும் மலபார், ஒரிஸாவின் தென் எல்லையில் ஜெய்ப்பூர் ஜமீன் என முற்றிலும் எதிரெதிர் துருவப் பகுதிகளில் இப்படியான சமூகவியல் ஒற்றுமை காணப்படுவது விரிவான ஆய்வுக்குரியது.
*
இந்த ஆய்வை மேற்கொள்வதை லண்டன் தலைமையகம் மே 1825-ல் வரவேற்றிருக்கிறது. மதராஸுக்கு அனுப்பிய கடிதத்தில் ‘இப்படியான ஓர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்த சர் தாமஸ் மன்ரோவுக்கு நன்றிகள் பல’ என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், ஆய்வு முடிவுகள் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு மதராஸ் பிரஸிடென்ஸிக்கு எழுதப்பட்ட கடிதமானது அந்த ஆய்வுத்தகவல்களை ஒரேயடியாக நிராகரித்து அந்தத் தகவல்களில் பெரும் வியப்பைத் தெரிவித்திருந்தது. 1828 ஏப்ரல் 16-ல் எழுதப்பட்ட கடிதத்தில், ‘இந்தத் தரவுகள் சில விஷயங்களில் பற்றாக்குறையுடன் இருக்கின்றன; எனினும் உள்ளூர் மக்களுக்கு மேலான கல்வியைக் கொடுப்பதற்கு ஏற்கெனவே இருக்கும் கல்வி அமைப்பிலிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்கு சுட்டிக்காட்டுகிறது’ என்று எழுதப்பட்டிருக்கிறது.