அத்தியாயம் 8: வங்காளம் மற்றும் பிஹாரில் பாரம்பரிய இந்தியக் கல்வி பற்றிய ஆடம்மின் அறிக்கை
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 10th November 2015 10:00 AM | Last Updated : 07th November 2015 01:09 PM | அ+அ அ- |

மதராஸ் பிரஸிடென்ஸியில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டதற்கு 13 ஆண்டுகள் கழித்து பெங்கால் பிரஸிடென்ஸியில் சற்று குறைவான தகவல்களின் அடிப்படையில் பகுதி - அதிகாரபூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதான் புகழ் வாய்ந்த ஆடம்மின் அறிக்கை. அல்லது 1836--38 ஆண்டுகளில் வங்காளத்தில் கல்வியின் நிலை குறித்த அறிக்கை.
அதில் மூன்று அங்கங்கள் இருக்கின்றன. முதலாவது 1836 ஜூலை 1, தேதியிட்ட அறிக்கை. அது வங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாரம்பரியக் கல்வி, அதன் தன்மை, வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றியது. இரண்டாவது 1835, டிசம்பர் 23 தேதியிட்டது. ராஜஷாய் மாவட்டத்தில் தானாவின் நாத்தூர் என்ற பகுதியில் ஆடம்மினால் எடுக்கப்பட்ட ஆய்வு. மூன்றாவது ஆய்வு 1838, ஏப் 28 அறிக்கை. முர்ஷிதாபாத்தின் பிராந்தியங்கள், பீர்பூம், பர்த்வான், தென் பிஹார், திரிகூடம் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட ஆய்வு. இவற்றோடு ஆடம்மின் அபிப்ராயங்கள், பரிந்துரைகள், தீர்மானங்கள் ஆகியவையும் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
ஆடம்மின் வார்த்தைப் பிரயோகம் மற்றும் கருத்துகள்
ஆடம்மின் அறிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக வங்காளம் மற்றும் பிஹார் பகுதிகளில் 1830கள் வரை சுமார் லட்சம் கிராமப் பள்ளிகள் ஏதோ ஒருவகையில் செயல்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மேலும் அவருடைய அறிக்கை, இந்திய பாரம்பரியக் கல்வி அமைப்பின் பிரமாண்ட அழிவு பற்றிய சித்திரத்தையே உருவாக்கியது. ஆடம் அடிப்படையில் கிறிஸ்தவ மதச் சார்ப்பும் ஒழுக்க உணர்வும் மிகுந்தவர். அவருடைய எழுத்துகளைப் படிப்பது மிகுந்த சலிப்பையே தரும். இந்திய ஆசிரியர்கள் குறித்தோ இந்திய பாரம்பரியக் கல்வி முறை குறித்தோ அவருக்கு அப்படியொன்றும் பெரு மதிப்பு எதுவும் கிடையாது. எனினும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய ஆரம்ப மற்றும் உயர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும், பொருளாதாரரீதியாக உதவிகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார். எனவே, அதைச் சாத்தியப்படுத்துவதற்காக எந்தவகை சித்திரத்தைச் தரவேண்டுமோ அதைச் செய்தார். பிரிட்டிஷ் அரசின் தலையீடு தேவை என்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டி இந்திய பாரம்பரியக் கல்வி அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சொல்லவேண்டிய தேவை இருந்தது. ஆசிரியர்கள் அறியாமையில் இருப்பதாகவும், பள்ளிக்கான புத்தகங்கள், கட்டடங்கள் போதுமான அளவு இல்லை என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இருந்தது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 1818-ல் வில்லியம் ஆடம் வங்காளத்துக்கு மத போதகராகத்தான் வந்து சேர்ந்திருந்தார். அவர் அதைவிட்டுவிட்டு பத்திரிகைத்துறைக்கு மாறிய பின்னாலும் சம கால பிரிட்டிஷார் மத்தியில் செல்வாக்குடன் இருந்த இரண்டு கோட்பாடுகள் ஆடம்மின் மனத்திலும் அழுத்தமாக வேரூன்றியிருந்தன: அதில் ஒன்று வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் போன்றவர்கள் முன்வைத்ததுபோல் இந்தியாவை கிறிஸ்தவமயமாக்கவேண்டும் என்ற கருத்து. இன்னொன்று டி.பி.மெக்காலே மற்றும் வில்லியம் பெனெடிக் போன்றோர் முன்வைத்ததுபோல் இந்தியாவை மேற்கத்தியமயமாக்கவேண்டும் என்ற கருத்து. முன்பே சொன்னதுபோல் 1813-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சார்ட்டர் ஆக்ட்டில் இந்த இரண்டு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. ஆடம்மின் ஆய்வுகள் அதிகாரபூர்வ ஆவணங்கள் இல்லை என்றபோதிலும் அவற்றை செய்யச் சொல்லி நிதி உதவி அளித்து உத்தரவிட்டதெல்லாம் கவர்னர் ஜெனரல்தான். எனவே, அந்த ஆய்வறிக்கைகளும் மதராஸ் பிரஸிடென்ஸி கலெக்டர்கள் தந்த அறிக்கைகளும் முந்தைய பிரிட்டிஷ் அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை நேரடியாக விமரிசிக்கும் தொனியில் இல்லை என்பது இயல்பான விஷயம்தான்.
பரந்துபட்ட, மதிப்பு மிகுந்த சமூக ஆவணங்கள்
ஆடம்மின் ஆய்வின் முக்கியமான அம்சம் அதன் கடின உழைப்பும் பரந்துபட்ட தன்மையும்தான். முதலாவதாக 1800க்கு பிந்தைய ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அடுத்ததாக அவருடைய சொந்த நேரடி ஆய்வுகள். ஒரு லட்சம் பள்ளிகள் வங்காளத்திலும் பிஹாரிலும் இருந்தன என்ற அவருடைய கூற்று தொடர்பான சர்ச்சைகள் மறக்கப்பட்டபின்னும் மாணவர்கள், ஆசிரியர்களின் சாதி வாரியான தரவுகள், கல்வியின் பல்வேறு நிலைகளில் மாணவர்களின் வயது, பள்ளியில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் என அவர் சேகரித்த தகவல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
மறு பிரசுரம் செய்யப்பட்டவை
ஆடம்மின் ஆய்வறிக்கையில் இருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றன (பின்னிணைப்பு - டி). அவற்றில் ஆரம்பக் கல்வி பற்றி முதல் மற்றும் இரண்டாம் அறிக்கையில் உள்ள தகவல்கள். இரண்டாவதாக, முதல் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட உயர் கல்வி பற்றிய தகவல்கள். மூன்றாவதாக நாத்தூர், ராஜஷே பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி பற்றிய தரவுகள். மூன்றாவது அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து சில அடிப்படைத் தரவுகள். இந்தக் கடைசி தரவுகள் கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழே இடம்பெற்றிருந்தன.
அ. ஆரம்பப் பள்ளிகள் மற்றும் சாதி வாரியான மாணவர்களின் எண்ணிக்கை
ஆ. ஆரம்பப் பள்ளிகள் மற்றும் சாதிவாரியான ஆசிரியர்களின் எண்ணிக்கை
இ. ஆரம்பப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள்
ஈ. சமஸ்கிருதக் கல்வி வழங்கப்பட்ட கல்வி மையங்கள் பற்றிய விவரங்கள்
உ. சமஸ்கிருத வகுப்புகளில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள்.
ஊ. பாரசீக அரபு வகுப்புகளில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள்
எ. பாடங்கள் மற்றும் பள்ளி கால அளவு மாவட்ட வாரியாக
முதல் அறிக்கை : 1800க்கு பிந்தைய தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு
யதார்த்த நிலைமை என்ன என்பது பற்றிய பொதுவான கருத்துகளை உள்ளடக்கிய அறிக்கை இது. 1800க்குப் பிந்தைய அதிகாரபூர்வ மற்றும் பிற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அது உருவாக்கப்பட்டிருந்தது. அவரது தீர்மானங்கள்: கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. வங்காளத்திலும் பிஹாரிலும் 1,50,748 கிராமங்கள் இருக்கின்றன. எனவே சுமார் ஒரு லட்சம் கிராமங்களில் நிச்சயம் இது போன்ற பள்ளிகள் இருக்கின்றன.
இரண்டாவதாக, அவருடைய சொந்த நேரடி ஆய்வுகள் மற்றும் பிற தரவுகளில் இருந்து பெங்காலில் உயர் கல்விக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 100 கல்வி மையங்கள் இருந்தன என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அப்படியாக மொத்தம் இருந்த 18 மாவட்டங்களில் சுமார் 1800 உயர் கல்வி மையங்கள் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சமாக ஆறுபேர் என்று வைத்துக்கொண்டாலும் 10,800 மாணவர்கள் உயர் கல்வி பெற்றிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஊரில் மிகவும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் அல்லது அதற்கு அருகில் ஆரம்பப் பள்ளிகள் நடத்தப்பட்டன. களிமண்ணால் கட்டப்பட்ட மூன்றில் இருந்து ஐந்து அறைகள் கொண்ட மையங்களில் உயர் கல்வி தரப்பட்டது. சில ஊர்களில் 9லிருந்து 11 அறைகள்கூட இருந்திருக்கின்றன. தனியாக வாசிப்பறை (நூலகம்) என இருந்திருக்கிறது. இந்த அறைகளே மாணவர்கள் தங்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மாணவர்களுக்கு உணவு, உடை எல்லாவற்றையும் ஆசிரியர்களே தந்திருக்கிறார்கள். தேவைப்பட்ட இடங்களில் கிராமத்தினரும் இதற்கு உதவி செய்திருக்கிறார்கள். இரு கல்வி மையங்களிலும் கற்றுத் தரும் வழிமுறையையும் அன்றாடச் செயல்பாடுகளையும் விவரித்த பிறகு ஆடம் 1800க்குப் பிந்தைய தரவுகளை மாவட்ட வாரியாக அலசிப் பார்த்திருக்கிறார். இந்த ஆய்வின் சுருக்கத்தை அட்டவணை 10-ல் பார்க்கலாம்.
அட்டவணை 10
1800க்குப் பிந்தைய ஆவணங்களில் (ஆடம்மின் குறிப்புகளுடன்) குறிப்பிடப்பட்டிருக்கும் உயர் கல்வி மையங்கள்
மாவட்டம் அல்லது இடம் | மக்கள் தொகை | ஹிந்து - முஸ்லிம் விகிதம் | 1800க்குப் பிந்தைய ஆவணங்களில் (ஆடம்மின் குறிப்புகளுடன்) குறிப்பிடப் பட்டிருக்கும் உயர் கல்வி மையங்கள் | |
தினாஜ்பூர்
| 16 | 30,00,000 (1808) |
3 - க்கு 7
| புக்கனன் - 16: ஆடம் : மாவட்ட எல்லை கணிப்பில் சில தவறுகள் நடந்துள்ளன. |
பர்னேயா
| 16 | 14,50,000 (1801) 29,04,380 (1810) | 57 - க்கு 47 | புக்கனன் : 119.
|
கல்கத்தா | 17 | 2,00,000 (1822) தோராயமாக | வார்டு : (1818): 28, மாணவர்கள் : 173 | |
நதேயா
| 17 | 11 - க்கு 5 | வார்டு : (1818): 31, மாணவர்கள் : 747. தர்கம், சட்டம் (ஸ்மிருதிகள்). ஹெச்.ஹெச்.வில்சன் : (1820): 25. மாணவர்கள் 500-600. அதிகாரிகள் : (1816) 46, மாணவர்கள் : 380. | |
78 | ||||
79 | ||||
குமாரு ஹட்டா | 81 | வார்டு : 7-8 | ||
பாத்பரா | 81 | வார்டு : 7-8 | ||
24 பர்குனாஸ் | 22 | 16,25,000 (1801) | ஹாமில்டன் : (1801): 190 | |
ஜெய் நகர் | 22 | வார்டு : 17-18
| ||
முஜ்லீபூர்
| 22 |
|
வார்டு : 17-18
. | |
அந்தோலி | 22 | வார்டு : 10-12
| ||
மித்னாபூர் | 50& 51 | 15,00,000 (1801) |
6 - க்கு 1 | ஹாமில்டன் : யாருமில்லை ஆடம் : 40 |
கட்டக் (பூரி)
| 54 | 12,96,365 | 10 - க்கு 1
| ஸ்டர்லிங் : பிரின்சிபல் ஸ்ட்ரீட் ஆஃப் மேத்ஸ்.
|
ஹூக்ளி | 57& 58 | 10,00,000 (1801)
| 3 - க்கு 1
| வார்டு : (1818), ஹேமில்டன் (1801): 150, சட்டம்.
|
வன்சாரியா
| தர்க்கம்: 12-14
| |||
திரி வேணி
| தர்க்கம் : 7-8
| |||
குண்டூல்புரா
| நியாய சாஸ்திரம் 10 | |||
பத்ரேஷ்வரு
| நியாய சாஸ்திரம் 10
| |||
வாலீ | நியாய சாஸ்திரம் 2-3
| |||
பர்த்வான்
| 70 | 14,44,487 (1813 & 14)
| 5 - க்கு 1
| ஹாமில்டன் : யாருமில்லை. ஆடம் : அபாரம்
|
ஜெஸ் ஸோர்
| 73 | 12,00,000 (1801)
| 7 - க்கு 9 | தகவல் இல்லை.
|
டாக்கா ஜபல்பூர் | 85
| 9,38,712 (1801)
| 1 - க்கு 1
| ஹாமில்டன் : சொற்பம் பாதி அடிமைகள்.
|
பேக்கர் கரூஞ் சி
| 86 | 9,26,723 (1801)
| 5 - க்கு 3
| தகவல் இல்லை. ஆடம் : நிச்சயம் ஏதேனும் இருக்கவேண்டும்.
|
சிட்ட காங்க் | 88& 89 | 12,00,000 (1801)
| 2 - க்கு 3
| தகவல் இல்லை. சில முஸ்லிம்கள், பிராமணர்கள்.
|
திரிபுரா
| 91 | 7,50,000 (1801)
| 4 - க்கு 3
| தகவல் இல்லை
|
மைமூன்சிங்
| 92 | 13,00,000 (1801) | 2 - க்கு 5
| ஹேமில்டன் : 2-3 ஒவ்வொருவருக்கும் 24 பர்குனாக்கள். வீதம்
|
சிலெட் | 93& 94 | 4,92,945
|
3 - க்கு 2 | தகவல் இல்லை
|
ராஜஷை | 103& 104 | 1,50,000 (1801)
| 2 - க்கு 1
| தகவல் இல்லை. ஆடம் : ஒரு சில இருக்கும். |
ரங்பூர் | 106& 107 | 27,25,000 (1801)
| 12 - க்கு 15
| ஆடம் : 9 துணைப் பிரிவுகளில் 41
|
மூர்ஷிதா பாத் | 96 | 10,20,572 (1801)
| 2 - க்கு 1
| 1801 மதிப்பீடு : 21. ஆடம் : கூடுதல் இருக்கும்.
|
பீர்போம் | 98& 100 | 12,67,067 (1801) | 30 - க்கு 1
| ஹேமில்டன் : ஒன்றுமில்லை. ஆடம் : ஒரு சில இருக்கும்.
|
இரண்டாவது ஆய்வறிக்கை : நாத்தூர், தானா பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வுகள்
ராஜ்ஷாகை மாவட்டத்தின் நாத்தூர் மற்றும் தானா பகுதிகளில் கள நிலமையை நேரடியாக ஆய்வு செய்து ஆடம் இந்த இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார். இன்றைய நவீன மேலோட்டமான பறவைப் பார்வை ஆய்வைப் போன்றது இது. இதில் தனது ஆய்வு முறைகள், ஆய்வுத்தகவல்கள் ஆகியவற்றைச் செழுமைப்படுத்த நல்ல பயிற்சியாக இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நாத்தூர் பகுதியில் ஒவ்வொரு கிராமத்தையும் ஆராய்ந்து சுமார் 485 கிராமங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். வேறு சில கிராமங்கள் பற்றிய சில தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. தானா பகுதியின் மொத்த மக்கள் தொகை 1,20, 928. மொத்த குடும்பங்கள் 30,028 (இந்து முஸ்லிம் விகிதம் 1:2) மொத்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 27. உயர் கல்வி மையங்கள் 38 (பிந்தையவை எல்லாமே இந்து). 1588 குடும்பங்களில் (இதில் 80% இந்துகள்) சிறுவர்களுக்கு வீடுகளிலும் கல்வி தரப்பட்டன. ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 262. 8 - 14 வயது சிறுவர்கள் அங்கு கல்வி பெற்றனர். உயர் கல்வி மையங்களில் 397 பேர் படித்தனர். அதில் 136 பேர் உள்ளூர்காரர்கள். 261 பேர் தொலை தூரங்களில் இருந்து வந்து படிப்பவர்கள். அவர்களுக்குத் தங்குமிடமும் உணவும் அந்த கிராமத்திலேயே தரப்பட்டன. இந்தக் கல்வி மையங்களில் கல்விக்கான கால அளவு 16 வருடங்கள். 11 வயதில் இருந்து 27 வயது வரை கல்வி கற்றிருக்கிறார்கள். எனினும் ஆரம்பப் பள்ளிகளில் கற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கிறது. இந்த 485 பள்ளிகளில் 123 பொது மருத்துவர்கள், 205 கிராம மருத்துவர்கள் இருந்தனர். 21 சின்னம்மை நோய் சிகிச்சையாளர்களில் பெரும்பாலானவர்கள் பிராமணர்களே. அவர்கள் பாரம்பரிய இந்திய வழிமுறையிலேயே சிகிச்சையளித்தனர். 297 செவிலியர், 722 பாம்பு பிடாரர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஐந்து மாவட்டங்களில் செய்யப்பட்ட ஆய்வு : மூன்றாம் அறிக்கை
ஆடம்மின் 3வது அறிக்கையில்தான் மிகுதியான தகவல்கள் இருக்கின்றன. இந்த அறிக்கையில் முர்ஷிதாபாத்தில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான தகவல்களை விவரித்திருக்கிறார் (மொத்த 37 தானாக்களில் 20 தானாக்கள் இதில் இருக்கின்றன, மொத்த மக்கள் தொகை 9, 69, 447; அதில் 1,24,804 இங்கு வசிக்கிறார்கள்). பெங்காலில் இருக்கும் பீர்பூம், பர்த்வான் மற்றும் பிஹாரில் இருக்கும் திர்கூட் மாவட்டங்களின் முழுத் தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்தின் ஒரு தானாவிலும் ஆடம் இந்த ஆய்வுகளைத் தானே நேரடியாகச் செய்திருக்கிறார். வேறு கூடுதல் தகவல்களையும் சேகரித்திருக்கிறார். எஞ்சிய கிராமங்களில் அவரிடம் நன்கு பயிற்சி பெற்ற இந்திய உதவியாளர்கள் அவருடைய வழிகாட்டுதலுக்கு ஏற்ப தரவுகளைச் சேகரித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அனைத்து கிராமத்தையும் ஆடம் நேரில் போய் பார்த்து ஆய்வு செய்ய விரும்பியிருக்கிறார். ஆனால், ஒரு கிராமத்துக்குள் திடீரென்று ஒரு ஐரோப்பியர் நுழைந்தால் அது அவர்களிடையே பெரும் பீதியைக் கிளப்பிவிடும். அதை அதன் பிறகு மட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடும். எனவே அவர் நேரடியாகப் போய் ஆய்வு செய்யும் முடிவை மாற்றிக்கொண்டார். நேரத்தை மிச்சம் செய்யும் நோக்கமும் இதில் உண்டு.