17. விபத்துகளால் ஏற்படும் காயங்கள்

முதுகுத்தண்டில் பல(Multiple) முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
17. விபத்துகளால் ஏற்படும் காயங்கள்

இவ்வகையான காயங்கள் பெரும்பாலும் விபத்துகளாலும், எலும்பு முறிவுகளாலும் ஏற்படும் காயங்கள். முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்படுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இவ்வகையான எலும்பு முறிவுகள், பெரும்பாலும் விபத்துகளாலேயே ஏற்படுகின்றன. ஏனெனில், முதுகுத்தண்டு அவ்வளவு சுலபமாக உடையாது. அதேபோல், நம் உடம்பில் உள்ள மற்ற எலும்புகளைவிட, நம் முதுகுத்தண்டு மிகவும் உறுதியானது. ஏனெனில் முதுகுத்தண்டு, பல நூறு தசைகளால் ஊன்றி நிற்கின்றது. இந்த தசைகள், மிகவும் ஆழமானவை. எனவே முதுகுத்தண்டு உடைவது என்பது சுலபம் அல்ல. அப்படி உடைந்தால், பெரும்பாலான நேரங்களில் முதுகுத்தண்டு சுக்கு நூறாகும். ஆம், ஏனெனில் நாம் இங்கே சொல்வது விபத்தைப் பற்றி. அதாவது, விபத்தால் எவ்வளவு விசை (Force) உண்டானால் முதுகுத்தண்டு உடைந்து சுக்கு நூறாகும். அப்படி சுக்கு நூறாகும்போது முதுகுத்தண்டு மட்டுமில்லாமல் தசை, நரம்புகள், Ligament போன்றவை எல்லாம் பாதிக்கப்படும். அதனால், இவ்வகையான எலும்புமுறிவுகள் மிகவும் ஆபத்தானவை.

ஆனால், வெகு சில நேரங்களிலேயே முதுகுத்தண்டில் பல (Multiple) முதுகுத் தண்டில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்குக் காரணம், நான் மேலே கூறியது போல், முடுகுதண்டைச் சுற்றி பலநூறு தசைகள் மட்டம் Ligament கள் இருப்பதால். அதேபோல், இவ்வகையான எலும்பு முறிவுகள் வயதானவர்களுக்கும் முதுகுத்தண்டில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், எலும்புகளில் எலும்பு தாது திண்மம் (Bone Mineral Density) குறை ஏற்படுவதால். இது, வயதானவர்க்கு ஏற்படும் மிகவும் பொதுவான ஒன்று. ஏனெனில், வயதாகாக, நம் உடலில், தாது (Minerals) சத்துக்கள் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். இதனால், நம் எலும்புகளில் தாது சத்து குறைந்து எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நீங்கள் அனைத்து சத்து நிறைத்த உணவுகளை உண்பது மிகவும் அவசியம். ஆனால், இந்நாளில் இவ்வகையான குறைபாடு அனைத்து வயதினருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

உதாரணமாக, பெண்கள் 40 வயதைக் கடந்ததும், இவ்வகையான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. அதேபோல், உங்கள் முதுகுத்தண்டில் தொடர்ந்து ஏற்படும் அழுத்தம், இவ்வகையான எலும்பு முறிவுக்கு காரணமாகிறது. உதாரணமாக, நீங்கள் Golf, Tennis விளையாடும் வீரராக இருந்தால், இவ்வகையான "Stress Fracture" கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் குழந்தைகள் இவ்வகையான விளையாட்டுகளில் ஈடுபடும்போது, அதற்கு தேவையான முன் பயிற்சிகள் (Preparatory Exercises) செய்தல் அவசியம். இல்லையெனில் இவ்வகையான "Stress Fracture" கள் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். இவ்வகையான எலும்பு முறிவுகளுக்கான சிகிச்சை முறைகள் என்னென்ன என்பதைப் பாப்போம்.

சிகிச்சை முறைகள்:

  • முதுகுத்தண்டில் ஏற்படும் எலும்பு முறிவுகள், ஒன்றிரண்டு முதுகெலும்பில் ஏற்பட்டால் அதற்கான சிறந்த சிகிச்சை ஓய்வு மட்டுமே.
  • Mulitiple (பல) முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டால், அறுவை சிகிச்சை மூலம் அவைகளை நிலைபடுத்த (Stabilize) செய்ய வேண்டும். இவ்வகையான எலும்பு முறிவுகள் குணமாக 6 மாத காலமாவது ஆகும்.
  • அதேபோல், மேம்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமே, நீங்கள் முழுமையாக குணமடைய முடியும். ஏனெனில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்கள் இயக்கம் (Mobilty) குறைய அதிக வாய்ப்புள்ளது. அதை மீட்டெடுக்க மேம்பட்ட சிகிச்சை முறைகள் மிகவும் அவசியம்.
  • "Stress Fracture" கள் ஏற்பட்டால் ஓய்வு மட்டம் சரியான உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். அதேபோல், விளையாட்டிலிருந்தும் குறைந்தது 3 மாத காலம் ஓய்வு தேவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com