கீழடி ஸ்பெஷல் : கீழடி சம்மந்தமாக பாலசுப்ரமணியம் ஆசிரியருக்கு பிரதமர் மோடி உதவினாரா?

கீழடியில் இருந்த ஒரு ஆசிரியரிடம் விசாரித்ததில், பாலசுப்ரமணியம் என்ற அந்த ஆசிரியர் சிலைமான் இரயில் நிலையம் அருகில் குடியிருப்பதாகச் சொன்னார்.
திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம்.
திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம்.

கீழடி தொடக்கம்.. ஆசிரியர் பாலசுப்ரமணியம்


கீழடியில் இருந்த ஒரு ஆசிரியரிடம் விசாரித்ததில், பாலசுப்ரமணியம் என்ற அந்த ஆசிரியர் சிலைமான் இரயில் நிலையம் அருகில் குடியிருப்பதாகச் சொன்னார்.

நண்பர் அண்ணலுடன், தேடி ஆசிரியர் காலணியில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்ரமணியத்தைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியவர் திரு. சிவசுப்ரமண்யம்.

75-வயதை கடந்து விட்ட நிலையிலும் ஒரு தொல்லியல் ஆய்வு மாணவனாகச் குறையாத சுறுசுறுப்புடன் இருந்தார். மண்ணுக்குள் புதைந்திருந்த பழந்தமிழர் வாழ்விடம் வெளியே வந்த வரலாற்றைக் அவரிடம் கேட்டார்.


அவருடைய சொந்த ஊர் அருப்புக்கோட்டை பக்கமுள்ள பொம்மாக்கோட்டை. 1973-இல் கீழடி அரசு உயர் நிலைப் பள்ளிக்கு ஆசிரியராக வந்தார். அவர் எந்த ஊருக்கு வேலைக்குச் சென்றாலும் அந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டுகள், பழைய மண் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், பழைய கால உலோகத்தில் செய்யப்பட்ட பொருட்கள், அங்குள்ள வட்டார மொழிகள், நாட்டுப்புறப் பாடல்கள் போன்றவற்றை அங்குள்ள மாணவர்கள் மூலமாகத் தெரிந்து கொள்வார்.

இதற்காக ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர தேர்வுகளில் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் கொடுப்பாராம். இதனால் மாணவர்கள் நிறையச் செய்திகளை அவருடைய கவனத்துக்குக் கொண்டு வருவார்கள். 1974-ஆம் ஆண்டு, இப்போது ஆய்வு நடைபெற்றுவரும் பகுதியில் ஒரு கிணறு தோண்டியுள்ளனர். அதிலிருந்த ஒரு செங்கல்லை ஒரு மாணவன் எடுத்துக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்துள்ளார். இங்கு ஆரம்பித்தது கீழடியின் கதை.

அந்த செங்கல்லின் அமைப்பைப் பார்த்ததுமே இது சங்ககாலத்தைச் சேர்ந்தது என்பது தெரிந்தது. உடனே மாணவர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு செங்கல் கிடைத்த இடத்துக்கு சென்றார்.

ஒரு இடத்தில் கிணறு வெட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த மண் மேட்டிலிருந்து கழுத்துக்கு மேலே தலை மட்டுமுள்ள உள்ள ஒரு சுடுமண் பொம்மை, கருப்பு-சிவப்பு வண்ணம் கொண்ட ஒரு மண் குவளை, ஒரு நாணயம் கிடைத்தது. கிணற்று சுவற்றில் இருந்த ஒரு மண் தாழியை அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் எடுத்து கொடுத்தார்கள். அதில், ஒரு மண்டை ஓடும், கொஞ்சம் எலும்பும் இருந்தது.

அங்கே கிடைத்த பொருளை எல்லாம் கொண்டுவந்து சில நாள் பள்ளியிலேயே சில நாட்கள் வைத்துள்ளார். இதுகுறித்து, அப்போதைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கீழடியில் கிடைத்த பொருட்களைப் பற்றி ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதற்கு இன்றளவும் பதிலில்லையாம்.

அடுத்த ஆண்டு பள்ளியிலேயே "ஹிஸ்டரி கார்னர்" என்ற ஒரு பகுதியை ஏற்படுத்தி இந்த பொருட்களை அங்கே வைத்து மாணவர்களுக்குக் காட்டியுள்ளார். பிறகு பள்ளியில் இடமில்லாத காரணத்தால் அவற்றை அவருடைய வீட்டில் ஒரு பகுதியில் வைத்துப் பாதுகாத்துள்ளார்.

1976-ஆண்டு வரலாற்றுத் துறை சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறு வாரக் காலம் பயிற்சி கொடுத்தார்கள். அந்தப் பயிற்சிக்கு  சென்னைக்குச் சென்றார். அப்போது தான், தொல்லியல் சார்ந்த பயிற்சிக்கு தொல்லியல் ஆய்வுத்துறையின் இயக்குநர் நாகசாமி வந்திருந்தார்.

கீழடியில் கிடைத்த பொருட்கள் பற்றி அவரிடம் எடுத்துரைக்க, உடனே அப்போது ஆய்வாளராக இருந்த வேதாசலம் என்பவரை  அனுப்பி அவரிடமிருந்த பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு போய் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்தார். அவற்றை வெளி நாடுகளுக்கு ஆய்வுக்கும் அனுப்பினார்.

அதற்குப் பிறகு 1977-இல், சென்னையில் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு இவரையும் அழைத்திருந்தனர். இவர் கீழடியிலிருந்து எடுத்துக்கொண்டு போன பொருட்களைப் பற்றிய ஆய்வு முடிவுகளை நாகசாமி அவர்கள் விளக்கி சொன்னார்.

இறுதியில், கீழடியில் கிடைத்த பொருட்கள் சங்ககாலத்தைச் சேர்ந்தது தான் என்று ஆய்வு முடிவில் அறிவித்தனர். ஆய்வாளர்கள் எல்லோர் முன்னிலையிலும் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்து மரியாதை செய்தார்.

இதன் மூலமாக தமிழகத்திலுள்ள அனைத்து தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின், திருபுவனம், அழகர்மலை மற்றும் வைகை ஆற்றோரம் உள்ள கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களைப் பார்க்க இவருடைய மாணவர்களைக் கூட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

1977 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் இருந்த தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவ்வப்போது சில ஆய்வாளர்களும் இங்கு வருவார்கள். இங்குள்ள கல்வெட்டுகள், கீழடி தொல்லியல் மேடு உள்ள பகுதிகளை செய்வார்கள். இவர் மாணவர்களுடன் வெளியூர்களுக்கு சென்று வந்து கொண்டிருந்துள்ளார்.

இடையில் பணி மாற்றம் காரணமாக நெல்லை மாவட்டம் களக்காடு பகுதிக்குச் சென்று விட்டார். அந்தப் பகுதியிலும் என்னுடைய ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். இப்படியே காலம் ஓடிக்கொண்டிருந்தது. பணி ஓய்வு பெற்ற பின்னரும் சிலைமானில் வீடு வாங்கி இங்கேயே தங்கி விட்டார். தொல்லியல் ஆய்வாளர்களுடன் கடித தொடர்பை விடாமல் வைத்திருந்தார்.

2013-இல் ஒரு நாள் மத்திய தொல்லியல் துறையின் ஆய்வாளர்கள் வேதாசலம், அமர்நாத் ராமகிருஷ்ணன், இராஜேஸ் மூவரும் ஆசிரியரின் வீட்டுக்கு வந்தார்கள். “1973-இல், நீங்கள் பார்த்த அந்த கிணற்றை காட்டவேண்டும்” என்று சொன்னார்கள். உடனே புறப்பட்டு அந்த இடத்துக்கு போனோம்.

அன்று நான் பார்த்தபோது புஞ்சைக் காடாக இருந்த நிலம் இப்போது தென்னந் தோப்பாக மாறியிருந்தது. நான் பார்த்த அந்த கிணறு எங்குள்ளது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனாலும், அவர் மனைவியிடம் படித்த மாணவரான திலீப்கான் அங்கிருந்தார். அவர்கள் வந்த நோக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அந்த தோப்பு முழுவதையும் கூட்டிக்கொண்டு போய் சுற்றிக்காட்டினார்.

நல்ல வேலையாக அவருடைய நிலத்தில் சில இடங்களில் நிலத்துக்கு மேலே இருந்த கால்வாயிலேயே கருப்பு சிவப்பு, ஓடுகள், சங்ககால செங்கல் துண்டுகள் கிடைந்தது. அருகிலிருந்த ஒரு பழைய கிணற்றுக் குழியில் அமர்நாத்தும், இராஜேசும் இறங்கிப் பார்த்தார்கள்.

குழியில் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு முழு செங்கல் கிடைத்தது. கிணற்று சுவற்றில் நிறைய படிமங்கள் புதைந்திருந்தது. அந்த குழியிலேயே 2௦௦௦, ஆண்டுகளுக்கு முன்பிருந்த தரையின் மட்டம் தெரிந்தது. அதிலிருந்து மேலே 15-அடி உயரத்துக்கு மேலே ஆற்று மணல் வந்து இந்தப் பகுதியில் சூழ்ந்துள்ளது தெளிவாக காணமுடிந்தது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆய்வாளர்கள் வந்தனர். மதுரையிலிருந்து வைகை ஆற்றின் கரை ஓரமாகவே பல்வேறு இடங்களில் ஆய்வுக் குழிகளை அமைத்துக் கொண்டே ஆத்தாங்கரை வரைக்கும் சென்றார்கள்.

மொத்தம் 293, ஆய்வு குழிகளை வெட்டி ஆய்வு மேற்கொண்டனர். அதில், கீழடியைச் சுற்றியுள்ள 4.6 சதுர கிலோ மீட்டர் பகுதியில் மட்டும் தான் வைகை ஆற்றின் தரைமட்டத்திலிருந்து 12-முதல்15-அடிவரை மணல் சூழ்ந்து நிலம் உயர்ந்துள்ளது தெரிந்தது.

ஆக இந்த பகுதியில், ஆற்று மண் மூடிய தொல்லியல் மேடு உள்ளே இருக்க வாய்ப்புள்ளது என்பது உறுதியானது. அதன் பின்னர் தான், அந்த பகுதியிலுள்ள 110-ஏக்கர் நிலத்தில் அகழ்வாய்வு செய்ய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். பின்னர், மதிய அரசுக்கு அறிக்கை அனுப்படுகிறது. அங்கிருந்து நிதி ஒதுக்கீட்டு செய்யப்பட்டது.

இந்த 110, ஏக்கர் நிலமும் தென்னை மரங்கள் வளர்ந்துள்ளது. இந்த நிலத்தை வைத்துள்ளவர்கள் பலர் இவருடைய மாணவர்கள் அல்லது இவர் மனைவியிடம் படித்த மாணவர்கள்.

அதனால், அவர்களின் நிலத்தில் ஆய்வு செய்வதில் எந்த சிக்கலும் வரவில்லை. ஜனவரியில் தொடங்கி, மே முடிய ஆய்வு செய்துகொள்ளலாம். பருவமழை தொடங்கும் முன்பாக நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும்.

தென்னை மரத்தை வெட்டாமல் குழிகளை அமைத்து உள்ளே உள்ளவற்றை ஆய்வு செய்து கொண்டு மீண்டும் குழிகளை மூடிக் கொடுத்து விடவேண்டும் என்று ஒப்பந்தத்தின் பேரில் இங்கே ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

கீழடியும் பிரதமர் மோடியும்


கீழடி யில் உள்ளது போலவே குஜராத் மாநிலத்தில் “தோலாவிரா” என்ற இடத்தில் 296-சதுர கிலோ மீட்டார் பரப்பளவில் ஒரு புதை மேடை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்குத் தேவையான சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகளையும், குடியிருக்க வீடுகளையும் நரேந்திர மோடி முதல்வராக இருந்த நேரத்தில் அமைத்துக் கொடுத்துள்ளார்.

அவர் ஒரு வரலாற்று ஆர்வலர் என்ற தகவல் தெரிந்தது. “கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்” என பிரதமருக்கு நான் கடிதம் எழுதினார்.

ஆசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய கடிதம் பிரதமர் மோடி அவர்களின் அலுவலகத்தில் சேர்ந்தது.

ஒரு வாரத்தில் இவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அன்றே கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதன் பிறகு தான் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு கீழடிக்கு வந்தார். ஆய்வகம் அமைக்க இடம் பார்த்தார்கள். ஆசிரியரையும் கூட்டிக் கொண்டுபோய் பல இடங்களைக் காட்டினார்கள்.

எல்லா இடமுமே போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள இடமாகவே இருந்தது. அதுவும் ஆய்வகம் அமைக்கத் தேவையான அளவுக்கு வசதி கொண்டதாக இல்லை.

முதல் கட்டமாக சிலைமானுக்கும், கீழடிக்கும் இடையில் 70-சென்ட் இடத்தை ஒதுக்கிக் கொடுக்க தமிழக அரசு முன் வந்துள்ளது. அந்த இடம் சரியான வடிவில் இல்லை.

சுற்றிலும் வெவ்வேறு அரசு அலுவலக கட்டடங்கள் உள்ள பகுதியில், ஒழுங்கற்ற வடிவமாக அந்த இடம் உள்ளது. தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க அது ஏற்ற இடமல்ல என்பதால் அந்த இடத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.

மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு
இந்த இடத்தில் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்ய எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லை. தென்னந் தோப்பிலே உள்ள தற்காலிக குடிலில் தான் எல்லோரும் தங்கவேண்டியுள்ளது.

கழிப்பறை, குடிநீர், மின்சாரம் போன்ற எல்லா வசதிகளையும் அந்த இடத்தின் உரிமையாளர்கள் தான் எங்களுக்குச் செய்து கொடுக்கிறார்கள். கடந்த ஒரு மாதம் முன்புவரை ஆய்வு மேற்கொண்டுள்ள இடத்துக்குப் போக வர ஒழுங்கான பாதை வசதி கூட இல்லாமல் தான் இருந்தது.

தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் இந்த இடத்துக்கு நான்கு முறை வந்துள்ளார். முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மூன்று முறை வந்தார். அவர்கள் இருவருமே சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் இந்த இடத்தில் நின்று கொண்டே பலமுறை தொடர்பு கொண்டு பேசியும் பெரிய வசதிகள் இல்லை.

அந்த இடத்துக்குப் போக சாலை வசதியைக் கூட இங்குள்ள அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை. இப்போது, உள்ளூர் நண்பர் ஒருவர் அவருடைய சொந்த செலவில் பாதையை ஒழுங்கு செய்து கொடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com