வித்தியாசமான முறையில் புத்தாண்டு கொண்டாடப்படும் நாடுகள்!

ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாய் கொண்டாடப்படும். சில நாடுகளில் வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள்.
 புத்தாண்டு கொண்டாட்டம்.
புத்தாண்டு கொண்டாட்டம்.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாய் கொண்டாடப்படும். சில நாடுகளில் வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள்.

* புது ஆண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதற்காக, பிரேசில் நாட்டில் புத்தாண்டன்று வெள்ளை உடையை அணிகின்றனர்.

* ஸ்பெயின் மேட்ரிக் நகரில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடிகார கூண்டின் முன் மக்கள் சரியாக 12 மணியளவில் கூடுவார்கள். 12 விநாடிகளில் 12 திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவார்கள்.

* நார்வேயில் அரிசியில் பல பண்டங்களைச் செய்து, அத்துடன் கீர் செய்து பாதாம் பருப்பைப் போடுவார்கள். சாப்பிடும்போது, யாருக்கு பாதாம் வருகிறதோ அவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் செல்வம் தேடி வரும் என்பது நம்பிக்கை.

* இங்கிலாந்தில் புத்தாண்டுக்கு வீட்டுக்கு வரும் முதல் ஆண் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார் என்ற பாரம்பரியம் இன்று வரையில் நம்பப்படுகிறது. செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிக்கும் வழக்கம் இங்குள்ளது. புத்தாண்டையொட்டி, சல்சா நடனம், இசைக் கச்சேரிகள் நடைபெறும்.

-மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com