புலி எப்பொழுதும் பின்பக்கமாகவே தாக்குவது ஏன்?
தனது இரையைப் பிடிக்க, பஞ்ச தந்திரம் மட்டுமல்ல பலவிதத் தந்திரங்களைப் புலி கையாளும். எளிய விலங்குகளைக் கண்டால் புலியின் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
அந்தச் சமயத்தில் தனது வலிய உடலை புல், புதர்களில் சாதுர்யமாக மறைத்துக் கொண்டு திடீர் என்று தாக்குதல் நடத்தும்.
சாம்பார் மான் என்று ஒரு வகை இருக்கிறது. அந்த மானைக் கண்டுவிட்டால், சற்றே தூரத்தில் ஒளிந்து கொண்டு அந்த மானைப் போலவே மிமிக்ரி செய்து கத்தும். இதைக் கேட்ட அந்த மான் தனது குரல் போலவே இருக்கிறது என்று நினைத்து அருகில் வரும். அப்போது, புலி தனது தாக்குதலை நடத்தும்.
ஆனால், விலங்குகள் கூட்டமாக வந்தால் இத்தகைய தந்திரங்கள் எல்லாம் பலிக்காது. ஆகவே கூட்டம் நகரும்போது கடைசியாகச் செல்லும் விலங்கை மட்டுமே குறி வைக்கும் புலி. அந்தச் சமயத்தில் மற்ற விலங்குகளின் கவனத்தைக் கவராமல் இருக்கவும் நேரத்தை வீணாக்கமல் இருக்கவும் அந்த விலங்கின் பின்பக்கமாகத் தாக்கும்.
இப்படிப் பின்பக்கமாகத் தாக்குவதற்கு மற்றொரு முக்கிய காரணம், அந்த விலங்கின் தண்டுவடத்தை நோக்கிப் புலி பாய்வதால் தண்டுவடம் பாதிக்கப்பட்டு அது செயலிழக்கும் நிலை ஏற்படுகிறது. புலிக்கு வேட்டை எளிதாகிவிடும்.
Summary
Why do our eyes darken when we move from the sunlight into the shade?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

இது தெரியுமா? யானைகளுக்கு மட்டும் பெரிய காதுகள் இருப்பது ஏன்?
மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


