எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நீதிக் கதைகள்! ஒரு விடைக்கு ஒரு பழம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

News image

நீதிக் கதைகள்! ஒரு விடைக்கு ஒரு பழம்! - படம்: கோப்பிலிருந்து...

Updated On :18 மே 2026, 1:47 pm IST

கதிரேசன் ரொம்ப புத்திசாலியான மனிதர். துறுதுறுப்பானவர். யோசனைகள் சொல்வதில் வல்லவர். அதனால் ஊரிலுள்ளோர் அவரிடம் அணுகி ஆலோசனைகள் கேட்பர்.

அதே ஊரில் பச்சையப்பன் என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் யாரைப்பார்த்தாலும் ஏதாவது கேள்வி கேட்பான். இது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. அவனது கேள்விகளுக்கு ஊரிலுள்ளோர் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அவர்கள் கதிரேசனைப் பார்த்துக் கேள்விகளைக் கேட்டால் அவர் பதில் சொல்வார் என்று பச்சையப்பனிடம் சொன்னார்கள்.

பச்சையப்பனும் கதிரேசனைச் சந்திக்கச் சென்றார். தன்னிடம் நிறைய கேள்விகள் இருப்பதாகவும் கதிரேசனிடம் அதற்கு பதில் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார் பச்சையப்பன். பச்சையப்பனின் பையில் ஆரஞ்சுப் பழங்கள் இருப்பதைக் கவனித்தார் கதிரேசன்!

கதிரேசன் பச்சையப்பனிடம், "ஒரு கேள்விக்கு ஒரு ஆரஞ்சுப் பழம் தரவேண்டும் சம்மதமானால் நான் பதில் சொல்கிறேன்!...." என்றார். பச்சையப்பனும் சம்மதித்தார்.

பிறகு ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக்கொண்டே வந்தார் பச்சையப்பன். கதிரேசனும் சளைக்காமல் பதில் சொன்னார். ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு ஆரஞ்சுப் பழத்தை வாங்கித் தின்றார். இப்படியாக எல்லாப் பழங்களும் தீர்ந்தன. பச்சையப்பனுக்கு ஆச்சரியாமாக இருந்தது!

"ரொம்ப வியப்பா இருக்குதுங்க,...... எப்படி இத்தனை ஆரஞ்சுப் பழங்களை நீங்கள் தின்றீர்கள்?...." என்றார்.

"உங்களிடம் வேறு பழங்கள் இல்லாததால் என்னால் பதில் சொல்ல முடியாது!..." என்றார் கதிரேசன்.

கதிரேசனின் கிண்டலை உணர்ந்த பச்சையப்பன் அன்று முதல் அனாவசியமாக யாரையும் கேள்வி கேட்டுத் துளைப்பதில்லை!

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.