தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருப்பாச்சேத்தி அருகே கம்பால் தாக்கி விவசாயி கொலை

மானாமதுரை, நவ.7: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே திங்கள்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற விவசாயியை மர்ம கும்பல் கம்பால் தாக்கி கொலை செய்தது. திருப்பாச்சேத்தி அருகே டி.வேலாங்குளம் கிராமத்தைச்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:17 pm

யுகன்

மானாமதுரை, நவ.7: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே திங்கள்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற விவசாயியை மர்ம கும்பல் கம்பால் தாக்கி கொலை செய்தது.

திருப்பாச்சேத்தி அருகே டி.வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் ஜெயராமன்(43). விவசாயியான இவர், கிராமத்திலுள்ள தனது வீட்டிலிருந்து நடந்து சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து அவரை கம்பால் தாக்கியது. இச் சம்பவத்தில் அவர் தாடையில் பலத்த காயம் பட்டு அந்த இடத்திலேயே இறந்தார். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. ஜெயராமன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஜெயராமன் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து தப்பிச்சென்ற மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.