யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநகராட்சி அலுவலர் என்று கூறி பணம் வசூலித்த இளைஞர் பிடிபட்டார்

சேலம், அக். 28: சேலத்தில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் என்று கூறி வீடு வீடாக பணம் வசூலித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். சேலம் மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள உடையப்ப காலனி பகுதி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:06 am

தங்கராஜா

சேலம், அக். 28: சேலத்தில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் என்று கூறி வீடு வீடாக பணம் வசூலித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள உடையப்ப காலனி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று, நாங்கள் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் என்று கூறி தீபாவளி பணம் வசூலித்துள்ளனர்.

மேலும் அவர்கள் அங்கிருந்த ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளின் சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்துள்ளனர். சேலம் மாநகரில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்திருந்த அப்பகுதி மக்கள், இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

அத்துடன் பணம் வசூலித்து வந்த நபர்களைப் பிடிக்க முயன்றபோது அவர்களில் சிலர் தப்பியோடிவிட்டனர். ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (30) என்ற நபர் மட்டும் அவர்களிடம் சிக்கியுள்ளார்.

இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாகச் சென்று மரவனேரி, சங்கர் நகர், வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர், பணியாளர்கள் என்று கூறி கடந்த சில நாள்களாக பணம் வசூலித்து வந்திருப்பதும், இரண்டு வாகனங்களின் பூட்டை உடைத்து திருட முயற்சித்திருப்பதும், வீட்டின் வெளியில் கிடந்த இரும்பு சாமான்களைத் திருடிச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ப.ஆறுமுகத்திடம் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். மது அருந்தி போதையில் இருந்த அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.