தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

2 சிறுவர்கள் பலி: வேதாரண்யம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்

வேதாரண்யம், செப்.2: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் மண் சரிவால் நீரில் மூழ்கி நேற்று இறந்தனர். இது மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளம் என்பதால், இதைத் தொடர்ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:11 am

சங்கர்

வேதாரண்யம், செப்.2: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் மண் சரிவால் நீரில் மூழ்கி நேற்று இறந்தனர். இது மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளம் என்பதால், இதைத் தொடர்ந்து மணல் எடுப்பதை முறைப்படுத்தக் கோரி இன்று காலை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம், தாணிக்கோட்டகம், காலனித் தெருவைச் சேர்ந்த குமார் மகன் தமிழ்மணி(6). இதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் செடில்ராஜ்(9). இவர்களிருவரும், அப்பகுதியில் உள்ள மணல் எடுத்ததால் உருவான குளத்தின் கரையில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, குளக்கரையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், தமிழ்மணி, சேகர் ஆகிய 2 பேரும் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டு, 2 சிறுவர்களையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு, 2 சிறுவர்களும் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது குறித்து வாய்மேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதி மக்கள் வேதாரண்யம் தாணிக்கோட்டகம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மணல் எடுப்பதை முறைப்படுத்த வலியுறுத்தி மேற்கொண்ட இந்த சாலை மறியலால் அந்தப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.