மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை
கோவை, ஏப்.10: மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி சௌந்தரவல்லி. இவர்களது மகன் சென்ற மாத


கோவை, ஏப்.10: மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி சௌந்தரவல்லி. இவர்களது மகன் சென்ற மாதம் பாம்பு கடித்து மரணமடைந்தார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்ரமணியம், சௌந்தரவல்லி இருவரும் மிகுந்த துக்கத்தில் இருந்தனர். திடீரென நேற்று இரவு அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் மகளுக்கும் விஷம் கொடுத்துள்ளனர். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குரும்ப பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...