ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட சாத்தபத்தூர் பகுதிகளில் வயல்களின் மேலாகச் செல்லும் மின் ஒயர்கள் கம்பங்கள் பழுதடைந்து கிடப்பதால் தாழ்நிலையில் தொங்குகின்றன. மேலும் மின் கம்பங்கள் பல உடைந்து, அரிப்பால் சாய்ந்து கிடக்கின்றன. இது தொடர்பாக கடந்த 6 மாத காலமாக மக்கள் பத்து முறை சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மின் கம்பங்களைச் சரிசெய்யக் கோரி நடந்த போராட்டங்களால் இதுவரை எந்த பலனும் இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் மக்கள். அதிகாரிகள் மெத்தனப் போக்கோடு செயல்படுவதால் விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர்.