இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேமுதிக இல்லையேல், அதிமுக வெற்றிபெற்றிருக்காது : விஜயகாந்த்

தமிழக அரசின் சாதனையே டாஸ்மாக் வசூலாகத்தான் உள்ளது. இதுவரை ரூ.18,000 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், தற்போது ரூ.22,000 கோடியாக மாறியுள்ளது. தமிழகத்தில்...

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:03 am

சீனிவாசன்

கடலூர், ஆக., 27 : மக்களுக்காக மக்கள் பணி தலைப்பில் பல்வேறு நலத்திட்டட்ப பணிகளை தேமுதிக கட்சி பல்வேறு மாவட்டங்களில் செய்து வருகிறது. அதன்படி கடலூரில் நேற்று  மாலை பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணியும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பயனாளிகள் பலரும் குழந்தைகளோடு வந்தனர். தேமுதிக தொண்டர்கள் பெரும்பாலானோர் குடிபோதையில இருந்தனர். இந்நிலையில், மேடைக்கு முன்பு செய்தியாளர்களும், நலத்திட்ட உதவிகளைப் பெற வந்த பெண்களும் அமரவைக்கப்பட்டிருந்தனர். விஜயகாந்த் பேச ஆரம்பித்த போது, தேமுதிக தொண்டர்கள் மேடை நோக்கி வர முயன்றனர். இதனால் மேடை முன்பு அமர்ந்திருந்த பத்ரிக்கையாளர்கள், பெண்கள், குழந்தைகள் நெரிசலில சிக்கி பெரிதும் பாதிக்கப்பட்டனர். கைக் குழநதைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நலத்திட்ட உதவிகளைப் பெற வந்த ஊனமுற்றவர் பெண்கள் நெரிசலில் சிக்கினர். இவர்களை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வெளியேற்றினர். போலிஸார் எவ்வளவோ முயற்சித்தும் தொண்டர்களை அடக்க முடியவில்லை. அங்கு பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்களைக் கட்டுப்படுத்த விஜயகாந்த்தும் எவ்வளவோ கூறியும், அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.

இதற்கிடையே பேசிய விஜயகாந்த், டெல்டா லிவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கடலூரில் சுனாமி மற்றும் தானே புயலால் பாதிக்கப்பட்டும், அங்கு உரிய நிவாரணப் பணிகள் நடைபெற வில்லை. தெருவிளக்கு வசதிகள் கூட செய்யப்படவில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மின்சாரம் தடையில்லாமல் தருவோம் என்று சொன்னார்கள் ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. மேட்டூரில் ஆகஸ்ட் மாதம் வரை தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

தமிழக அரசின் சாதனையே டாஸ்மாக் வசூலாகத்தான் உள்ளது. இதுவரை ரூ.18,000 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், தற்போது ரூ.22,000 கோடியாக மாறியுள்ளது. தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தேமுதிக இல்லை என்றால் அதிக வெற்றி பெற்றிருக்காது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தொண்டர்களை வைத்து என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று விஜயகாந்த் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.