ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

குரூப்-2 விவகாரம்: 4 பேர் ஜாமீன் ரத்து

ஈரோடு, ஆக.30: ஈரோடு மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 வினாத்தாள் வெளியானது தொடர்பான முறைகேட்டில், ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்ட 4 பேரின் ஜாமீனை ஈரோடு நீதிமன்றம் ரத்து செய்தது. பவானியைச் சேர்ந்த செ

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:07 am

ஜபலின் ஜான்

ஈரோடு, ஆக.30: ஈரோடு மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 வினாத்தாள் வெளியானது தொடர்பான முறைகேட்டில், ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்ட 4 பேரின் ஜாமீனை ஈரோடு நீதிமன்றம் ரத்து செய்தது.

பவானியைச் சேர்ந்த செந்தில், அவர் மனைவி தனகோடி, தனியார் ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர் வரதராஜன், கல்லூரிப் பேராசிரியர் சுதாகர் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். பின்னர் அவர்கள் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை அடுத்து சென்ற வாரம் அவர்கள் ஜாமினில் வெளிவந்தனர். இந்த நிலையில், இன்று அவர்களது ஜாமீன் மனுவை ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ரத்து செய்தார். இதை அடுத்து அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.