ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.

News image
Updated On :13 டிசம்பர் 2012, 6:34 am

தங்கராஜா

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.

நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்துக்கு வந்த ஒரு கடிதத்தில், சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலவலகம், மாநகர காவல்துறை ஆணையர் அலுவகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் இப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து இது புரளி என்று கூறிய போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.