எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அம்பாசமுத்திரம், முக்கூடல் பகுதியில் மறியல்: 455 பேர் கைது

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், முக்கூடல், ஆழ்வார்குறிச்சி, வீரவநல்லூரில் செவ்வாய்க்கிழமை மின்தடை உள்ளிட்ட பல்வேறு

News image
Updated On :18 டிசம்பர் 2012, 5:29 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், முக்கூடல், ஆழ்வார்குறிச்சி, வீரவநல்லூரில் செவ்வாய்க்கிழமை மின்தடை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 100 பெண்கள் உள்பட 455 பேர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும், மின்தடை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி அம்பாசமுத்திரம், வி.கே. புரம், முக்கூடல், வீரவநல்லூர், ஆழ்வார்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பு அமைப்பான

ஏஐடியூசி, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரத்தில் பூக்கடை சந்திப்பில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்ட சுடலைமணி, நமச்சிவாயம் மற்றும் 26 பெண்கள் உள்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர். விக்கிரமசிங்கபுரத்தில் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்ட எஸ். ரவீந்திரன், எஸ். முருகன், சுடலையாண்டி, பி. பாலசுப்பிரமணியன், கே. பாலசுப்பிரமணியன் மற்றும் 8 பெண்கள் உள்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆழ்வார்குறிச்சியில் பஸ் நிலையத்தில் ஊர்வலமாக வந்து தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஆர். கசமுத்து, சிலம்புராமசாமி, சுரேஷ்பாபு, ராமகிருஷ்ணன், ராமசுப்பு, பூமாரி, வன்னியநம்பி, முத்தையா மற்றும் 7 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முக்கூடல் பஸ் நிலையத்தில் நடைபெற்ற மறியலில் கட்சியின் பாபபாக்குடி ஒன்றிய செயலர் த. சந்திரசேகரன், எஸ். முருகன், எஸ். வேலாயுதம், மாரிசெல்வம், அப்பாத்துரை, ஆறுமுகம், அனைக்கரமுத்து மற்றும் 12 பெண்கள் உள்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீரவநல்லூரில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் எஸ்.கே. பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற பி. கற்பகம், கீதா, ராமகிருஷ்ணன், வெங்கட்ராமன், கே.எஸ். திருமலையப்பன் மற்றும் 47 பெண்கள் உள்பட 178 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.