கரூரில் காணமால் போன சிறுவன் சடலமாக மீட்பு
கரூரில் காணாமல் போன சிறுவனை கிணற்றிலிருந்து சடலமாக போலீஸார் மீட்டனர்.


கரூரில் காணாமல் போன சிறுவனை கிணற்றிலிருந்து சடலமாக போலீஸார் மீட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அயூப் அலி ஆசிப், தனது மனைவி ரெஹீமா, மகன் அஸ்னூர் காஜி (5) ஆகியோருடன் கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஆறுமுகம் நகரில் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 17-ம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அஸ்னூர் காஜி காணாமல் போனான். இதுகுறித்து, அயூப் அலி ஆசிப் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு காவல் நிலைய் போலீஸார் வழக்குப் பதிந்து காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றில் அஸ்னூர் காஜி இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)செட்ரிக் மானுவல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...