எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் அருகே கடலில் ஒதுங்கிய கப்பல்: இழுத்துச் செல்லும் பணி தீவிரம்

காரைக்கால் அருகே மும்பையிலிருந்து பாரதீப் துறைமுகத்திற்கு கிரேன் ஏற்றி சென்றுகொண்டிருந்த மிதவைக் கப்பல், என்ஜின் பழுதால் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. கப்பலை கடலுக்குள் இழுத்துச் செல்லும் பணிகளில் கப்பல் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2012, 1:17 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் அருகே மும்பையிலிருந்து பாரதீப் துறைமுகத்திற்கு கிரேன் ஏற்றி சென்றுகொண்டிருந்த மிதவைக் கப்பல், என்ஜின் பழுதால் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. கப்பலை கடலுக்குள் இழுத்துச் செல்லும் பணிகளில் கப்பல் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் வெளிநாடுகளில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கப்பல் வந்துகொண்டிருக்கிறது. இதற்காக நடு்க்கடலில் உள்ள சரக்குக் கப்பலை துறைமுகத்திற்கு இழுத்துவர டக் பயன்படுத்தப்படுவது வழக்கம். இது துறைமுகத்தில் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் துறைமுகத்திற்கு அருகே எம்.பி.சுசீலா என்ற பெயர்கொண்ட கிரேன் ஏற்றிய மிதவைக் கப்பல்  ஒன்று வியாழக்கிழமை பிற்பகல் திடீரென கரை ஒதுங்கியது. துறைமுக நிர்வாகம் ராடார் மூலம் தெரிந்துகொண்டு, கப்பல் குறித்த விவரத்தை சேகரித்தது. தங்களது நிறுவனக் கப்பல் இல்லையென்பதை உறுதி செய்துகொண்டது. இதுகுறித்து காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை மையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கடலில் நிற்கும் கப்பலில் உள்ள ஊழியர்களிடம் தொடர்புகொண்டு பேசினர்.

மும்பையிலிருந்து ஒடிஸா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு கிரேன் ஏற்றிக்கொண்டு 2 பார்ஜர் (மிதவைக் கப்பல்), டக் என்கிற அதிதிறன் மோட்டார் கொண்ட 3 இழுவைக் கப்பல்கள் இழுத்து சென்றுகொண்டிருந்ததாகவும், காரைக்கால் மாவட்ட கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, கிரேன் வைத்திருந்த ஒரு பார்ஜரில் உள்ள என்ஜின் பழுதானது. இதையொட்டி  கயிறும் அறுபட்டதால், கிரேன் சுமந்த பார்ஜர் வடக்கு வாஞ்சூர் பகுதியில் கரை தட்டியதாக தெரிவித்துள்ளனர்.

முதல்கட்டமாக கரைதட்டிய பார்ஜரை நடுக்கடலுக்கு இழுத்துச் செல்ல சில மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது அவ்வளவு சாத்தியமில்லையென கூறப்படுகிறது. அருகில் இருக்கும் துறைமுக நிர்வாகத்தின் உதவியை, பாதிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் கோரவில்லையென கூறப்படுகிறது. இருப்பினும் வியாழக்கிழமை இரவுக்குள் பார்ஜரை இழுத்து சென்று டக் உதவியுடன் இலக்கை நோக்கிப் புறப்பட்டுவிடுவோம் என கப்பல் ஊழியர்கள் தெரிவிப்பதாக இந்திய கடலோரக் காவல்படை தரப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்த மிதவைக் கப்பல்களில் இந்திய ஊழியர்கள் சுமார் 20 பேரை வரை இருப்பதாகவும், தொடர்ந்து மிதவைக் கப்பல் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் கூறிவருவதாகவும், இக்கப்பல்களில் இருந்து எண்ணெய் மற்றும் கழிவுப் பொருள்களை காரைக்கால் கடல் பகுதியில் கொட்டிவிடாமல் இருப்பதற்கான தகவல்கள் கூறப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இவற்றை கண்காணித்து வருவதாக இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.

காரைக்கால் கடல் பகுதி கடந்த சில நாள்களாக கடும் சீற்றமாக காணப்படுகிறது. கடுமையாக காற்று வீசிவருகிறது. வியாழக்கிழமை 2 மீட்டர் உயரத்தில் கடல் அலைகள் எழும்பியது.  இதனாலேயே என்ஜின் பழுதான மிதவைக் கப்பல் சுமையுடன் கரை ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.