ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து

சேலத்தில் இரவு 1 மணியளவில் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :24 டிசம்பர் 2012, 7:20 am

தங்கராஜா

சேலத்தில் இரவு 1 மணியளவில் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, நள்ளிரவு 1 மணியளவில் ஓமலூர் அருகே கமலாபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் பின்னால் இருந்த ஏசியில் தீப்பிடித்தது. இதனை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி அனைத்துப் பயணிகளையும் பத்திரமாக இறக்கினார். இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் பேருந்து முழுவதும் தீக்கிரையானது.

எனினும், இந்த பேருந்தில் பயணம் செய்த 35 பேரும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.