ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து : 7 பேர் பலி

சேலம் அருகே பட்டாசு குடோனில் இன்று மதியம் நேரிட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2012, 10:47 am

தங்கராஜா

சேலம் அருகே பட்டாசு குடோனில் இன்று மதியம் நேரிட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே செங்காட்டூர் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று இருந்தது. இதில் இன்று மதியம் திடீரென தீ விபத்து நேரிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் குடோனில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலியாயினர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்தத் தீவிபத்தில், ஆலையில் உரிமையாளர் சாந்தி (40) பலியானார். இவரது மகன் சூரியா (10) மற்றும், சிவகாமி (35) கேசவன் (15) தங்கம் (50) என ஐந்து பேரின் உடல்கள் அடையாளம் தெரிந்தன. மேலும் 7 பேர் அரசு மருத்துவமனையில் 100 % தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையில் திருவிழாக்களுக்கு வெடி தயாரித்தல் உள்ளிட்ட நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டாசு ஆலை முறையான உரிமம் பெற்று செயல்பட்ட ஒன்று. இன்று பள்ளி விடுமுறை என்பதால் பட்டாசு ஆலையில், உரிமையாளரின் குழந்தைகள் பணியைப் பார்க்க வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அளித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னி, மற்றும் எம்.பி. எம்.எல்.ஏக்கள் சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.