சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மக்கள் உரிமைகளுக்காக இணைந்து போராட பாமகவிற்கு தொல்.திருமாவளவன் அழைப்பு

சிதம்பரம் காந்திசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வீராணம்ஏரி நீரை பாசனத்திற்காக பிப்ரவரி மாதம் வரை திறந்து விடக்கோரியும், டெல்டா பாசனப் பகுதிகளில் நீக்கப்பட்ட 32 ஊராட்சிகளை மீண்டும் அதே பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தியும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:  சிதம்பரம்,

News image
Updated On :31 டிசம்பர் 2012, 11:05 am

தமிழகத்தில் மக்கள் உரிமைக்காக போராட எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது.  வீராணம் ஏரி நீர்பாசன உரிமையை மீட்பது உள்ளிட்ட மக்கள் உரிமைக்காக இணைந்து போராட பாமகவை நாங்கள் அழைக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிதம்பரம் காந்திசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வீராணம்ஏரி நீரை பாசனத்திற்காக பிப்ரவரி மாதம் வரை திறந்து விடக்கோரியும், டெல்டா பாசனப் பகுதிகளில் நீக்கப்பட்ட 32 ஊராட்சிகளை மீண்டும் அதே பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தியும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:  சிதம்பரம், வீராணம்ஏரி நீரை இப்பகுதி மக்களை கேட்காமலேயே சென்னை குடிநீருக்கு எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது பாசனத்திற்கு நீர் திறக்காமல் சென்னை குடிநீருக்காக நீரை தேக்கி வைப்பது இப்பகுதி மக்களிள் வயற்றில் அடிக்கும் செயலாகும். எனவே தமிழக முதல்வர் உடனடியாக உளுந்துபயிர் மற்றும் தாளடி விவசாயத்திற்காக பிப்ரவரி மாதம் வரை ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீரை திறந்து விட உத்தரவி வேண்டும். மேலும் 32 ஊராட்சிகள் டெல்டா பாசன பகுதிகள் பட்டயலிலிருந்து நீக்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே பட்டியலில் மேற்கண்ட ஊராட்சிகளை சேர்த்து அப்பகுதி விவசாயிகள் மும்முனை மின்சாரம் மற்றும் பயிர் காப்பீடு திட்டத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாயிகள் பிரச்சனைக்காக இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டத்தில் இங்கு நடத்த வேண்டும். தொடர்ந்து போராடினால்தான் தீர்வு கிடைக்கும். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்.

மத்தியஅரசை கர்நாடக அரசை அச்சுறுத்தி நீரை பெற்று தராமல் மெத்தனமாக உள்ளது. கர்நாடகத்தில் கட்சி பாகுபாடின்றி போராடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அமைதியாக உள்ளன.போராடுவதற்கு எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. மது, போதையினால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார். இதுபோன்ற மக்கள் பிரச்சனைக்காக போராடுவோம் வாருங்கள். அதைவிட்டு விட்டு காதல் செய்யாதீர்கள் எனக்கூறி சாதி வெறியை தூண்டி விடுகின்றனர்.  வீராணம் ஏரி உள்ளிட்ட மக்கள் பிரச்சனைக்காக பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடுவோம் வாருங்கள்.  மாணவர் கோபாலகிருஷ்ணன் படுகொலை, சந்தியா மரணம் ஆகிய வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி வருகிற ஜன.6,7 தேதிகளில் மாவட்டம் தழுவிய முற்றுகை போராட்டத்திற்கு நாங்கள் தயாராகிவருகிறோம் என தொல்.திருமாவளவன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.