தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருக்கோவிலூரில் கரும்பு டிராக்டர் பாரம் தாங்காமல் பின்னோக்கி வந்து விபத்து

திருக்கோவிலூர், பிப்.17: திருக்கோவிலூரில் கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று, பாலத்தில் ஏறும்போது, பாரம் தாங்காமல் பின்னோக்கி வந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 2 இருசக்கர வாகனங்கள் அடியில் சிக்கி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:12 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர், பிப்.17: திருக்கோவிலூரில் கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று, பாலத்தில் ஏறும்போது, பாரம் தாங்காமல் பின்னோக்கி வந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 2 இருசக்கர வாகனங்கள் அடியில் சிக்கி நாசமடைந்தன.

அரகண்டநல்லூர் பகுதியில் இருந்து திருக்கோவிலூர் வரும் தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில் வந்த டிராக்டர், பின்னர் மருத்துவமனை அருகில் உள்ள பாலத்தில் ஏறும்போது, பாரம் தாங்காமல் பின்னோக்கி இழுத்தது. இதில், நிலை தடுமாறி டிராக்டர் கரும்பு லோடுடன் குப்புறக் கவிழ்ந்தது. எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட இந்த விபத்து மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்ததில் நிகழ்ந்ததால், கீழே விழுந்து குவிந்து கிடந்த கரும்புக் கட்டுகளுக்குள் ஆட்கள் யாரேனும் சிக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு கரும்புக் கட்டுகளை அகற்ற முயன்றனர். ஆனால், இயந்திரம் பழுதடைந்துவிடவே, பொதுமக்களே சுமார் 26 டன் கரும்புக் கட்டுகளை அகற்றினர். இறுதியில் வேறு ஒரு பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, கரும்புக் கட்டுகளோடு டிராக்டரையும் நிமிர்த்தி போடப்பட்டது. இதனிடையே மக்கள் அச்சத்துடனும் ஆர்வத்துடனும் யாரேனும் அடியில் சிக்கியிருக்கிறார்களா என்று பார்த்தனர். ஆனால், அங்கே இரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் அடியில் சிக்கி சேதமடைந்திருந்தது.

இதனால், மக்கள்நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். இதனால் திருக்கோவிலூரில் மாலை நேரம் முதல் இரவு வரை சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.