பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிறர் இடத்தைக் காட்டி மனை விற்பனை: ரூ.1.89 கோடி மோசடி

கடையநல்லூர், ஜூலை 25: போலி ஆவணங்கள் கொண்டு ரூ.1.89 கோடிக்கு நில மோசடி செய்த 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடையநல்லூரில் ராயல் ஹோம் பவுண்டேஷன் என்ற பெயரில், கடையநல்லூரைச் சேர்ந்த குலாம் முகமது, ஜஹா

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:34 pm

குமார முருகன்

கடையநல்லூர், ஜூலை 25: போலி ஆவணங்கள் கொண்டு ரூ.1.89 கோடிக்கு நில மோசடி செய்த 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடையநல்லூரில் ராயல் ஹோம் பவுண்டேஷன் என்ற பெயரில், கடையநல்லூரைச் சேர்ந்த குலாம் முகமது, ஜஹான், அகமது, ஷேக் உதுமான், ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார், நயினாரகரத்தைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன், செங்கோட்டையைச் சேர்ந்த மரியதாஸ் ஆகிய ஏழு பேரும், பலரிடம் மனை விற்பதாகக் கூறி போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.89 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர். இவர்கள் 7 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.

கம்பநேரி-புதுக்குடி என்ற இடத்தில் ஒரு மனையைக் காட்டி, இதில் மனைப்பிரிவுகள் போடப்பட்டுள்ளதாகக் கூறி, அனைத்துமே பதிவு செய்யப்பட்டும் உள்ளன. ஆனால், அந்த இடம் வேறு ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அதைக் காட்டி இவர்கள் 7 பேரும் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இதில் 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1400 வீட்டு மனைகள் இவ்வாறு போடப்பட்டுள்ளன.

இவர்கள் 7 பேரும் தலைமறைவாகி விட்டதால், போலீஸார் அவர்களைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.