தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஜூன் 11ல்அரகண்டநல்லூர் ஸ்ரீபுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்கோவிலூர், ஜூன் 6:  திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள ஸ்ரீபுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 11-ம் தேதி நடக்கிறது.  சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் காலப்போக்கில் சிதி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:05 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர், ஜூன் 6:  திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள ஸ்ரீபுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 11-ம் தேதி நடக்கிறது.

 சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துபோனது.

 இக்கோயிலை சீரமைக்க விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருப்பணியைத் தொடங்கினர். அதன்படி இக்கோயில் வளாகத்தில் செல்வவிநாயகர், பாலமுருகன், நாகசக்தி, அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சன்னதி அமைக்கப்பட்டு வருகிறது.

 திருப்பணி முடிந்து வரும் 11-ம் தேதி இக்கோயிலுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.  

 முன்னதாக, வரும் 9-ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் இவ்விழா தொடங்குகிறது.  

 தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி ஹோமம், மகா கணபதி ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜை நடக்கிறது.

 10-ம் தேதி காலை 2-ம் கால யாக பூஜை நடக்கிறது. மாலை சுமங்கலி பூஜை, ஜபஹோமம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

 11-ம் தேதி காலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், நாடிச்சந்தனமும், தத்துவாச்சனையும், யாத்ராதானம் கடம் புறப்பாடும் நடக்கிறது.

 காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விமான கும்பாபிஷேகமும், மூலஸ்தான குப்பாபிஷேகமும், பரனூர் ஸ்ரீலஸ்ரீகிருஷ்ண பிரேமி சாமிகள் தலைமையில் நடக்கிறது.

 இதைத்தொடர்ந்து, சாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், அருட்பிரசாதமும் வழங்கப்படுகிறது.

 இரவு 11 மணிக்கு சாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னின்று செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.