அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கு: விடுவிக்கக் கோரிய அழகிரி மனு தள்ளுபடி

மதுரை, ஜூன் 16: மதுரையில் தேர்தல் நேரத்தில், அம்பலகாரன்பட்டி பகுதியில் மேலூர் தாலுகா அலுவலர் காளிமுத்து என்பவரைத் தாக்கியதாகக் கூறப்பட்ட புகாரில் கீழவளவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:15 am

தர்மராஜ்

மதுரை, ஜூன் 16: மதுரையில் தேர்தல் நேரத்தில், அம்பலகாரன்பட்டி பகுதியில் மேலூர் தாலுகா அலுவலர் காளிமுத்து என்பவரைத் தாக்கியதாகக் கூறப்பட்ட புகாரில் கீழவளவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தங்கள் பெயர்களை அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சேர்க்கப்பட்டதாகவும், இதனால், தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரி மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று நீதிபதி ஜெயகுமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னை விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணை ஆக. 9ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.