பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள கழிவுகள் : மதிமுக சார்பில் சாலை மறியல்

பொள்ளாச்சி, ஜூன் 19 : கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டும் கேரளாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் பொள்ளாச்சியை அடுத்து தமிழக எல்ல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:17 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஜூன் 19 : கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டும் கேரளாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் பொள்ளாச்சியை அடுத்து தமிழக எல்லைப் பகுதியான கோபாலபுரத்தில் இன்று 250க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதிமுக சார்பில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அரியலூரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

கேரளாவில் கொல்லப்படும் கோழிகளின் கழிவுகளையும், மருத்துவக் கழிவுகளையும் லாரிகளில் ஏற்றி நள்ளிரவில் எல்லைப் பகுதியில் உள்ள  தமிழக கிராமங்களின் விளை நிலங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இந்த அத்துமீறல் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது இந்த நிலை அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்று மதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.