பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு
அம்பாசமுத்திரம், ஜூன் 20: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் நீர்வரத்து அதிகரித்து புதன்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 25.40 அடியாக இருந்தது. தாமிரவருண


அம்பாசமுத்திரம், ஜூன் 20: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் நீர்வரத்து அதிகரித்து புதன்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 25.40 அடியாக இருந்தது.
தாமிரவருணி பாசனத்தில் நிகழ் கார் பருவ சாகுபடி பணிகள் இன்னமும் தொடங்கவிலலை. இப்பருவத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வேண்டிய சூழலில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த இரு தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 400 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 214 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு 75 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 350 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
பாபநாசம் அணையின் நீ்ர்மட்டம் 2 அடி உயர்ந்து 25.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 50.62 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 57.90 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணையில் 1 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 1 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 1 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...