கடையநல்லூர், மே 4: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே கடையநல்லூரில் மர்மக் காய்ச்சல் பிரச்னை நிலவுகிறது. இது குறித்து விழிப்புடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக, மாவட்ட மலேரியா அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார இயக்குனர் பரஞ்சோதி, பொது மருத்துவ இயக்குநர் பொற்கைப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக இந்த நடவடிக்கை எடுத்ததாக இன்று கடையநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தனர்.
மேலும், கடையநல்லூர் அரசுபொதுமருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், 5 பேர் டெபுடேஷனில் பணியில் நியமிக்கப்படுவர் என்றும் கூறினர்.
மேலும், லேப் டெக்னீஷியன் ஒருவர் உள்ளார். மேலும் ஒருவர் பணியில் அமர்த்தப்படுவார். இங்கே பிளட் கவுண்ட் டெக்னிக் இயந்திரம் இல்லை. இது குறித்த செய்தி தினமணியில் வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில், அம்பாசமுத்திரத்தில் இருந்து கம்ப்ளீட் ப்ளட் கவுண்டர் மெஷின் ஒன்று கொண்டுவரப்பட்டு இங்கே வைக்கப்படும். முன்பெல்லாம், இரத்த பிளேட்லட்கள் சேமிப்பு வசதி திருநெல்வேலியில் இருந்ததால், பிளட் பிளேட்லட் தேவைக்கு திருநெல்வேலிக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது தென்காசி அரசு மருத்துவமனையிலேயே ப்ளேட்ளட் சேமிப்பு வசதி இருப்பதால், நோயாளிகள் தென்காசி மருத்துவமனைக்கே பரிந்துரை செய்து அனுப்பப் படுகிறார்கள்.
தற்போது நிலவும் சுகாதாரக் குறைபாடு மற்றும் காய்ச்சல் ஒழிப்புக்காக, நகராட்சி மூலம் தினமும் 48 பேர் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தற்போது கடையநல்லூர் மருத்துவமனைக்கு துணை இயக்குநர் ஒருவர் உள்ளார். இன்னும் ஒரு மாத காலத்துக்கு கூடுதலாக ஒரு துணை இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

