சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை(ஏப். 21) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
மேற்கு ஆசிய போர் காரணமாக சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்க்கு பதிலாக, மீண்டும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.
இதனால், தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த ஏப். 14, 15, 16 ஆகிய 3 நாள்களிலும் மொத்தம் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்தது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை ரூ.1,200 குறைந்தது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனையானது.
இதனிடையே வாரத்தின் முதல் நாளான நேற்று(ஏப். 20) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,14,400-க்கும் கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 14,300-க்கும் ஒரு சவரன் ரூ. 1,14,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 275-க்கும், ஒரு கிலோ ரூ. 5,000 குறைந்து ரூ. 2.75 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
In Chennai today (April 21), the price of ornamental gold remains unchanged.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










