பாபநாசம் அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது
பாபநாசம் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை 70.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 84.51 அடியாகவும் உயர்ந்துள்ளது.


பாபநாசம் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை 70.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 84.51 அடியாகவும் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாள்களாக மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 15 மி.மீ., பாபநாசம் கீழ் அணையில் 1 மி.மீ., சேர்வலாறு அணையில் 5 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 12.2 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 780.67 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணை நீர்மட்டம் 1.20 அடி உயர்ந்து 70.60 அடியாக இருந்தது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 84.51 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 60.40 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 161 கனஅடி நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணை நீர்மட்டம் 73.60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 81.50 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...