இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூர் நகரமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா

கடலூர் நகரமன்றத்தின் இன்றைய அவசரக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 நவம்பர் 2012, 7:37 am

சீனிவாசன்

கடலூர் நகரமன்றத்தின் இன்றைய அவசரக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் நகரமன்றத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் சி.கே. சுப்ரமணியன் தலைமையில் மன்ற வளாகத்தில் இன்று நடந்தது.கூட்டம் தொடங்கியவுடன் சர்தார் (காங்கிரஸ்), அவசரக் கூட்டத்துக்கு காரணம் என்ன என்று கேட்டார்.

கடலூரில் உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக கூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  அதில் 30வது தீர்மானமாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 42வது வார்டு உறுப்பினர் செந்திலுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 7.8.2012 அன்று சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவரை கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கிவிடுகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியப்பட்டது.

ஆனால், இது குறித்து பேசிய மற்ற வார்டு உறுப்பினர்கள், அவருக்கு தற்போது பெயில் கிடைத்துள்ளது. இந்த தீர்மானத்தை இன்று அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றாமல், அடுத்த வாரம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினர்.

ஆனால், இது குறித்து பதிலளித்த ஆணையர் (பொறுப்பு) ரவி, இந்த விவகாரம் குறித்து முழுமையாக கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி  தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

இதனை எதிர்த்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சர்தார்,  நடராஜ்,  சங்கர் உள்ளிட்ட 9 பேர் நகரமன்றத் தலைவருக்கு முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர்.

இந்த நிலையில், 10வது வார்டு பாமக உறுப்பினர் ராமச்சந்திரன், தனது பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக 20 வார்டு உறுப்பினர் சரவணன் (பாமக) வெளிநடப்பு செய்தார்.

பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே, கடலூர் நகரமன்றக் கூட்டத்தில் இன்று  5 தீர்மானங்களைத் தவிர மற்றவை நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.