இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே கிடங்கில் தீ விபத்து : 2 கோடி பொருட்கள் சேதம்

பண்ருட்டி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், முந்திரி கொட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் எரிந்து தீக்கிரையாகின. இதில் 2 கோடி மதிப்பிலான முந்திரி, முந்திரிக் கொட்டைகள் சேதம் அடைந்தன.

News image
Updated On :6 நவம்பர் 2012, 7:07 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், முந்திரி கொட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் எரிந்து தீக்கிரையாகின. இதில் 2 கோடி மதிப்பிலான முந்திரி, முந்திரிக் கொட்டைகள் சேதம் அடைந்தன.

பண்ருட்டி அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புளியூர் என்ற இடத்தில் கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான வினித் கார்டன் என்ற இடம் உள்ளது. அங்கு சிமெண்ட் ஓடுவேயப்பட்ட கிடங்குகள்  வாடகை விடப்பட்டிருந்தன. இதில் ஒரு கிடங்கில் குறிஞ்சப்பாடியைச் சேர்ந்த சௌந்தர் என்பவர் வெளிநாடுகளில் மரச்சாமான்களை வாங்கி இங்கு இறக்கி வைத்திருந்தார். அதன் அருகே இருந்த மற்றொரு அறையில் பனிக்கன்குப்பத்தைச் சேர்ந்த முந்திரி தொழிலதிபர், முந்திரி மூட்டைகளை சேமித்து வைத்திருந்தார். இரண்டு கிடங்குகளுக்கும் இடையே ஒரு கதவு மட்டுமே தடுப்பாக இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு லாரிகளில் மரச்சாமான்கள் வந்தபோது, மின்சாரம் இல்லாததால், மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து பொருட்களை இறக்கியுள்ளனர். இந்த நிலையில், மெழுகுவர்த்தியை அணைக்காமல் சென்றதால், அது அருகில் இருந்த பிளாஸ்டிக் பேப்பர்களில் தீ பரவி, மரச்சாமான்கள் எரிந்துள்ளன. இதில், அருகில் இருந்த மரக்கதவில் தீப்பிடித்து அதன் மூலம் முந்திரி கிடங்குக்கும் தீ பரவியுள்ளது. இதில், அந்த கிடங்கில் இருந்த முந்தரி மூட்டைகளும் எரிந்து நாசமாயின.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி,  நெல்லிக்குப்பம், முத்தாண்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று 6 மணி நேரம் போரடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் மரச்சாமான்கள் மற்றும் முந்திரி முட்டைகள் என சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.