மின் தடை: சேரன்மகாதேவி அருகே பொதுமக்கள் திடீர் மறியல்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேகூனியூரில் செவ்வாய்க்கிழமை இரவு மின்தடை கண்டித்து பொதுமக்கள் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே
கூனியூரில் செவ்வாய்க்கிழமை இரவு மின்தடை கண்டித்து பொதுமக்கள் திடீர்
சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், வீரவநல்லூர், கல்லூர் துணை மின்
நிலைய பகுதியி்ல் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் மின்தடை அமலில்
உள்ளது. அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி பகுதியில் செவ்வாய்க்கிழமை
அதிகாலை 5.30 மணி முதல் 10 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பகல் 12 மணி முதல் 1 மணி வரை மின்தடை நீடித்தது. அதன் பின்னர்
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இரவு 9 மணி முதல் 11 மணி வரை மின் தடை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை 16 மணி
நேரத்தில் 10 மணி நேரம் மின் விநியோகம் இல்லை.
இரவு நேரம் மின் தடை ஏற்படுவதால் வியாபாரிகள், மாணவர்கள் பெரிது்ம்
பாதிக்கப்பட்டனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இரவில் மின் தடை
ஏற்படுவதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்கள், பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாகினர்.
இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவு கூனியூரில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது
காரணமாக மின் விநியோகம் சீராக கிடைக்கவில்லை என புகார் தெரிவித்து, பஸ்
நிலையம் அருகில் அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி பிரதான சாலையில்
பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் கிடைக்கும்
சில மணி நேரமும் கூனியூரில் மின்மாற்றி பழுது காரணமாக மின் விநியோகம்
சீராக கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர். அவர்களிடம் மின்வாரிய
அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை
விலக்கி கொண்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...