இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் அதிகாரிகள் தங்கியிருந்த அறையில் ஏசி எரிந்து தீ விபத்து

கடலூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் முன்னணி கம்பெனியின் அதிகாரிகள் தங்கியிருந்த அறையில் ஏசி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :7 நவம்பர் 2012, 12:34 pm

சீனிவாசன்

கடலூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் முன்னணி கம்பெனியின் அதிகாரிகள் தங்கியிருந்த அறையில் ஏசி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது.

கடலூர் - பரங்கிப்பேட்டை அருகே தமிழ்நாடு பவர் கம்பெனி லிமிடட் என்ற நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல முக்கிய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடம் எதிரில் தங்கியிருந்தனர். இந்த கம்பெனியின் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி விஜயக்குமார் தங்கியிருந்த அறையில் ஏசி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும், விஜயகுமார் வெளியில் ஓடி வந்ததால் காயம் ஏதும் ஏற்படாமல் உயிர்  தப்பினார். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடலூர் கடற்கரை சாலையில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.