காரைக்கால் துறைமுக வாயில் கதவை மூடி ஒப்பந்ததாரர்கள் மறியல் போராட்டம்
ரூ.10 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு துறைமுக நிர்வாகம் தொகை வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி, துறைமுக வாயில் கதவை மூடி ஒப்பந்ததாரர்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.


ரூ.10 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு துறைமுக நிர்வாகம் தொகை வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி, துறைமுக வாயில் கதவை மூடி ஒப்பந்ததாரர்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.
காரைக்காலில் இயங்கும் தனியார் துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு பணி செய்து வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் துறைமுகத்தினுள் குறிப்பாக, சிவில், மின்சாரம், மெக்கானிக்கல் துறைகள் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்.
ஒப்பந்ததாரர்கள் இன்று காலை திடீரென திரண்டு துறைமுகத்தின் வாயில் கதவை மூடினர். தொடர்ந்து வாயில் முன் அமர்ந்து, துறைமுக நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் கூறியது : துறைமுகத்தில் பணியேற்று செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு முறைபாக தரவேண்டிய தொகையை நிர்வாகம் தருவதில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்ததாரர்களுக்கு பணி முடிந்த நிலையிலும் தொகை தராததால் ஒவ்வொருவருக்கு பல லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. துறைமுகத்தில் சுமார் 50 ஒப்பந்ததாரர்கள் பணி செய்கின்றனர். 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் பணியாற்றுகின்றனர்.
தற்போது தீபாவளி வருவதையொட்டி சம்பளம், போனஸ் உள்ளிட்டவை தரவேண்டியுள்ளது. துறைமுக நிர்வாகத்திடம் பேசியும், நிர்வாகம் உத்தரவாதம் எதுவும் தராமல், ஒப்பந்ததாரர்களை ஏளனமாக பேசுகிறது. இதனால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.10 கோடி வரை நிலுவைத் தொகை உள்ளதாக தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டதால் துறைமுகத்தின் உள்ளேயிருந்து, வெளியிலிருந்தும் லாரி போக்குவரத்து முடங்கியது. துறைமுக நிர்வாக உதவிப் பொது மேலாளர் ராஜேஷ்வர்ரெட்டி, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினார். தற்போதே நிலுவைத் தொகையை காசோலையாக தரவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். நிர்வாகத் தலைமையுடன் பேசி விரைவாக தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ரெட்டி உறுதியளித்தும் யாரும் ஏற்காமல் சாலையின் குறுக்கே அமர்ந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...