இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கூடங்குளம் தாமதத்துக்கு முதல்வரும் காரணம் : அழகிரி

கூடங்குளம் அணு உலை இன்னும் உற்பத்தியைத் துவங்காததற்குக் காரணம் உதயக்குமார் மட்டுமல்ல, தமிழக முதல்வரும்தான் என்று திமுக எம்.பி. அழகிரி கூறியுள்ளார்.

News image
Updated On :10 நவம்பர் 2012, 12:03 pm

சீனிவாசன்

கூடங்குளம் அணு உலை இன்னும் உற்பத்தியைத் துவங்காததற்குக் காரணம் உதயக்குமார் மட்டுமல்ல, தமிழக முதல்வரும்தான் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அழகிரி கூறியுள்ளார்.

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் எதிர்ப்பாளர்களைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே நடைந்தது.

இதில் ழகிரி கலந்து கொண்டு பேசுகையில், நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் சுமார் 15 முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது. அதிமுக அரசுக்கு ஆற்றலும், வலிமையும் இல்லாததே இப்பிரச்னைக்குக் காரணம், மின்வெட்டினால், தொழிற்சாலைகள், விவசாயம், பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் போது அதிமுக பொறுப்பேற்றால் மூன்று மாதத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்துவேன் என்று கூறிய அதிமுக அரசு ஓராண்டுக்கு மேல் ஆகியும் நிலைமையை சரிப்படுத்த முடியாமல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் நிச்சயம் மின்சாரம் வேண்டும்.

மின்சாரம் இல்லை என்றால் எப்படி நாடு முன்னேறும். மின்சாரத்தை மத்திய அரசிடம் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர். பிரதமரை சந்தித்து தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற வேண்டுமேத் தவிர, வழக்குத் தொடர்வது காலநேரத்தை அதிகப்படுத்தும்.

கூடங்குளத்தை முன்னதாகவேத் தொடங்கியிருந்தால் இந்நேரம் மின்சாரம் கிடைத்திருக்கும். ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்னையால் இத்திட்டம் தடைபட்டுள்ளது. இந்த ஆறுமாத இடைவெளியில் ஏற்பட்ட மின் உற்பத்தி இழப்புக்குக் காரணம் உதயகுமார் மட்டுமல்ல, தமிழக முதல்வரும் காரணம். இலங்கை பிரச்னையில் வைகோவின் நிலை சரியென்றால், 15 வருடத்துக்கு முன்பே அவர் முதல்வராகியிருக்க வேண்டும். ஆனால் அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்று வைகோ கூறுகிறார். ஆனால் கர்நாடகாவில் வாழும் ஏராளமான தமிழர்களின் நிலையை அவர் கருத்தில் கொள்ளவில்லை.

அணு உலை அருகே வசிப்பவர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டால், அவர்கள் பாதுகாப்பாக எங்கு வாழ விரும்பினாலும் அங்கு அவர்களுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர மத்திய அரசு தயாராக உள்ளது. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், கூடங்குளம் அணு உலையில் சுமார் 2000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அதன் வளாகத்தில் தான் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று தெரிகிறது. இவ்வளவு ஏன் கல்பாக்கம் அணு மின் நிலையம் 20 வருஷமாக இயங்கி வருகிறது. சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட்டும் இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதை விட மிக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டது கூடங்குளம் அணு உலை என்று அழகிரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.