எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருமலைராயன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம் : வெண்ணெய்த்தாழி சேவையில் ஸ்ரீ முருகப்பெருமான்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியதையொட்டி, திங்கள்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News image
Updated On :18 நவம்பர் 2012, 10:14 am

செல்வ முத்துகுமாரசாமி

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியதையொட்டி, திங்கள்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 6 நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை நவவீரர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி முடிந்து ஸ்ரீ முருகப்பெருமான்  தினமும் காலை, மாலை வேளைகளில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2-ம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை படிச்சட்டத்திலும், இரவு யானை வாகனத்திலும், வெள்ளிக்கிழமை காலை படிச்சட்டத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், சனிக்கிழமை காலை படிச்சட்டத்திலும், இரவு இடும்ப வாகனத்திலும் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை வெண்ணெய்த்தாழி சேவையாக (முன் அலங்காரம்), ஜடை நாகத்தில் (பின் அலங்காரம்) பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.  இரவு ரிஷப வாகனத்தில் மின்சார  சப்பரப் படலில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

6-ம் நாளான திங்கள்கிழமை இன்று பல்வேறு காவடிகள் வீதிவலம் செல்ல, தேரில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதிவலம் நடைபெற்று, பகல் 1 மணியளவில் ஸ்ரீ அபிராமி அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2 மணியளவில் ஸ்ரீ முருகனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சூரனை சம்ஹரிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.