எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ரங்கசாமி அரசு அச்சப்படுகிறது: முன்னாள் முதல்வர் வி.வைத்திலிங்கம்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ரங்கசாமி அரசு அச்சப்படுகிறதெனவும், இதற்காகவே தேர்தலை நடத்தாமலிருக்க..

News image
Updated On :18 நவம்பர் 2012, 10:40 am

செல்வ முத்துகுமாரசாமி

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ரங்கசாமி அரசு அச்சப்படுகிறதெனவும், இதற்காகவே தேர்தலை நடத்தாமலிருக்க மறைமுகமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் வி.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

காரைக்காலில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வி.வைத்திலிங்கம் பேசியது :

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் உயர்நீதிமன்றத்தில் உத்தரவின்படி நடக்கவுள்ளது. புதுவையில் எல்லா கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடுகளை உரிய முறையில் செய்துவருகின்றன. ஆனால் ஆளும் கட்சி மட்டும் தேர்தல் குறித்து எந்த பணிகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அக்கட்சிக்கு தோல்வி பயம் தொற்றிக்கொண்டுள்ளது. எப்படியாவது தேர்தலை நடத்தாமல் இருக்க அரசு முயற்சிக்கிறது. இதற்காகவே வேறு நபர் மூலம் நீதிமன்றத்தில் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கான நிலையை ஏற்படுத்த வழக்கு தொடர்ந்திருப்பதாகவே சந்தேகம் கொள்ளமுடிகிறது.

தொகுதி வரையறை உள்ளிட்ட ஏதாவது காரணத்தைக் கூறி தேர்தலை நடத்தாமல் இருக்கவே அரசு முயற்சிக்கிறது. ஆளும் கட்சிக்கு 16 எம்.எல்.ஏ.க்கள், ஏராளமான வாரியத் தலைவர்கள் எல்லாம் இருக்கும்போது, திட்டமிட்டபடி தேர்தலை நடத்தாமல் பயப்படுவானேன் ?

ரங்கசாமி அரசு கடந்த 2 ஆண்டுகளில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வாட் வரி, மின்சாரம், பேருந்து கட்டணம், பால் விலை என புதுவையில் உயர்ந்து மக்கள் பாதித்துள்ளனர். இந்த ஆட்சியின் அவலத்தை மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். இவற்றால் ஆளும் கட்சிக்கு பெரும்  பாதிப்பு தேர்தலில் வந்துவிடுமென கருதியேயே தேர்தலை கண்டு அஞ்சுவதாக நினைக்கத் தோன்றுகிறது.

இந்த தருணத்தில் காங்கிரஸார் கடுமையாக உழைக்கவேண்டும். நல்ல வேட்பாளரை உள்ளூர் கட்சியினரே தேர்வு செய்து தலைமைக்கு பரிந்துரைக்கவேண்டும். மக்கள் ஆதிரிக்கக்கூடிய வேட்பாளர் தேர்வால், காங்கிரஸ் எல்லா இடங்களிலும் வெற்றிபெறும்.

புதுவையில் அதிமுக இருந்தும் இம்மாநிலத்திற்கு எந்த பயனும் இல்லை. புதுவையிலும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பதையே அக்கட்சி நினைக்கவில்லை. காவிரித் தண்ணீர் கிடைக்கவோ, கட்டுமானப் பொருள்கள் கிடைக்கவோ புதுவை அதிமுக தமிழக அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையிலும் சமச்சீர் பாடப்புத்தகத் திட்டம் அமலில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகம் கிடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. இதுகுறித்து புதுவை அதிமுகவும் கவலைப்படவில்லை, ரங்கசாமியும் ககவனத்தில்கொள்ளவில்லை. தமிழக முதல்வரை ரங்கசாமி சந்தித்து இதுகுறித்தெல்லாம் பேசினால் பல பிரச்னைகள் தீரும். ஆனால் அவர் அதை செய்ய முன்வரவில்லை என்றார் வைத்திலிங்கம். நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன், முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.