தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை.யில் கரை ஒதுங்கிய மர்மப் படகு! போலீஸார் விசாரணை

நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் கடற்கரைப் பகுதியில் மர்ம படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இந்தப் படகு நாகை பகுதியில்

News image
Updated On :25 நவம்பர் 2012, 5:21 am

சங்கர்

நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் கடற்கரைப் பகுதியில் மர்ம படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இந்தப் படகு நாகை பகுதியில் இருந்து முன்னர் வெளியாருக்கு விற்கப்பட்டதாம். அந்தப் படகில் சிகரெட், துணிமணிகள், பெட்டிகள் ஆகியவை இருந்தன. ஆனால் இந்த விசைப்படகில் வேறு யாரும் இல்லை. எனவே, இது இங்கிருந்து வெளி நாட்டுக்கு ஆட்களைக் கொண்டு செல்ல பயன்பட்டதா அல்லது, வெளி நபர்கள் யாரேனும் நாகை கடற்கரைப் பகுதிக்கு ஊடுருவியிருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

நாகை கடற்கரைப் பகுதியில் மர்மப் படகு கரை ஒதுங்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.