சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டிகள் கொள்ளை

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.65 ஆயிரம் ரொக்கம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Updated On :27 நவம்பர் 2012, 4:59 am

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.65 ஆயிரம் ரொக்கம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வல்லம்படுகையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இக்கடையின் விற்பனையாளராக சண்முகம் என்பவர் உள்ளார். திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடைந்ததை பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள மதுபானப் பாட்டில்களும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.