வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போலீசுக்கு தெரிவிக்காமல் துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :27 நவம்பர் 2012, 10:15 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டார்.

விக்கிரமசிங்கபுரம் கீழரதவீதியை சேர்ந்த எஸ்.எம். பாண்டியன் மகன் பாண்டியன்ராஜா (39). அகில இந்திய அளவில் பயன்படுத்தும் எஸ்.பி.பி.எல் ரக துப்பாக்கி வைத்திருந்தாராம். உரிமம் இருந்த போதிலும் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

காவல்துறைக்கு முறையான தகவல் தெரிவிக்காமல் துப்பாக்கி பயன்படுத்தியதாக பாண்டியன்ராஜாவை விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி, 3 தோட்டாக்கள் மற்றும் தோட்டா ஒன்று பயன்படுத்திய கவரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.