வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

குறைகிறது அணைகளின் நீர்மட்டம்: மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கார் பருவம் பொய்த்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்தால்தான் பிசான பருவ சாகுபடி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2012, 3:53 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கார் பருவம் பொய்த்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்தால்தான் பிசான பருவ சாகுபடி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தென்மேற்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி செய்யவில்லை. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில்  அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை பெய்தால் மட்டும் பிசான பருவ சாகுபடி பணிகளை தொடங்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 43.15 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 56.27 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 61.69 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தாமிரவருணி ஆற்றில் 404.75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் 15 தினங்களில் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் நீர்இருப்பு வேகமாக குறைந்து வருகிறது என அணை வட்டாரங்கள் தெரிவித்தன. தென்மேற்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து குறைந்து காணப்படுவதால் அணைகளுக்கு பெரிய அளவில் நீர்வரத்து இல்லை.

வடகிழக்கு பருவ மழை இம்மாத இறுதியில் தொடங்கி பெய்தால்தான் அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும். பிசான பருவ சாகுபடி செய்ய அணைகளில் தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது.

கடந்த 50 வருட கால வரலாற்றில் தாமிரவருணி பாசனத்தில் விவசாயம் பொய்த்ததில்லை. கார் பருவம் பொய்த்து விட்டதால் இம்மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.