தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை மாவட்டத்தில் ரயில் மறியல்: நல்லக்கண்ணு உள்பட 1300 பேர் கைது

நாகை மாவட்டத்தில் 3 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் : ஆர். நல்லக்கண்ணு மற்றும் 2 எம்.எல்.ஏ-க்கள் உள்பட 1,300 பேர் கைது

News image
Updated On :9 அக்டோபர் 2012, 5:48 pm

சங்கர்

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்புப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும். தமிழகத்தின் மின்பற்றாக்குறையை ஈடு செய்ய மத்திய தொகுப்பிலிருந்து மத்திய அரசு தமிழகத்துக்குக் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்ய நாகை மாவட்டம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகையில் ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் குழு உறுப்பினர் ஆர். நல்லக்கண்ணு, மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி. பொன்னுபாண்டி, சீர்காழியில் மறியலில் ஈடுபட்ட குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் கு. லிங்கமுத்து உள்பட சுமார் 1,300 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.