தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருக்கோவிலூர் அருகே கார் மரத்தில் மோதி 3 பேர் பலி

திருக்கோவிலூர் அருகே கார் ஒன்று சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் பலியாயினர்.

News image
Updated On :9 அக்டோபர் 2012, 11:27 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே கார் ஒன்று சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் பலியாயினர்.

திருவண்ணாமலை திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை வந்த இன்னோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரங்கள் 3ல் உரசிச் சென்று, 4வது மரத்தில் மோதி நின்று விபத்துக்குள்ளானது. அந்த கார் மகாராஷ்டிர மாநில பதிவு எண் கொண்டிருந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவருமே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி காரில் இருந்த சடலங்களை மீட்க முயன்றனர். இயலாமல் போகவே, பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் இறந்தவர்கள் குறித்து விசாரித்த போலீஸார்,  அனைவருமே மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம்  கார்வீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்.

காரில் இருந்த 7 பேரில் சிவாஜி, நிதின் மோரே, முப்பட்ராவ், சாகர்பட்ரே ஆகிய நால்வரும் படுகாயம் அடைந்தனர். சச்சின் ரெட்ரேக்கர், போரட் சவான், விஜய் சர்தார் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.

திருவண்ணாமலை -திருக்கோவிலூர் புறவழிச்சாலையில், சடக்கட்டிக்கும் குச்சிப்பாளையத்துக்கும் இடையே ஐயப்ப நகர் அருகே இந்த விபத்து நேர்ந்தது. திருப்பதி சென்றுவிட்டு சில இடங்களைப் பார்த்துவிட்டு ராமேஸ்வரம் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.