வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அம்பாசமுத்திரத்தில் பச்சிளங் குழந்தை குளத்தில் வீசிக் கொலை, பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பிறந்த ஒரு சில தினங்கள் ஆன ஆண் குழந்தையை குளத்தில் வீசிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2012, 12:18 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பிறந்த ஒரு சில தினங்கள் ஆன ஆண் குழந்தையை குளத்தில் வீசிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம் அருகே முடப்பாலம் கல்வெட்டான்குளத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த குவாரி அருகில் உள்ள குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில்  குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாக சனிக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அம்பாசமுத்திரம் போலீஸார், தீயணைப்பு படையினர் குட்டையில் இருந்து பச்சிளங்  குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிறந்து ஒரு சில தினங்களான ஆண் குழந்தை. குழந்தையின் பெற்றோர் யார் என தெரியவில்லை. குழந்தையின் மூக்கு, காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. தலையில் காயம் உள்ளது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.