தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கீழ்வேளூர் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை; பதற்றம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அதிமுக இளைஞரணி ஒன்றிய நிர்வாகி சரவணக்குமார் (28) இன்று காலை கீழ்வேளூர் க

News image
Updated On :13 அக்டோபர் 2012, 8:57 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அதிமுக இளைஞரணி ஒன்றிய நிர்வாகி சரவணக்குமார் (28) இன்று காலை கீழ்வேளூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவர் உயிரிழந்தார். இதை அடுத்து, கீழ்வேளூர் பகுதியில் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவரது படுகொலையால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் மற்றும் அவரது உறவினர்கள் மேற்கொண்ட இந்த சாலை மறியல் போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.