யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருவாரூரில் கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து 8 பேர் காயம்

திருவாரூரில் கல்லூரி பேருந்து ஓடம்போக்கி ஆற்றின் கரையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

News image
Updated On :13 அக்டோபர் 2012, 3:52 am

தங்கராஜா

திருவாரூரில் கல்லூரி பேருந்து ஓடம்போக்கி ஆற்றின் கரையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, இன்று காலை வழக்கம்போல் திருவாரூரில் மாணவ மாணவர்களை ஏற்றிக் கொண்டு, தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் சென்றது, காலை சுமார் 7.30 மணி அளவில் விளமல் பகுதியில் வந்தபோது, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓடம்போக்கி ஆற்றின் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 6 மாணவர்கள் 2 விரிவுரையாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனே திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.