வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அம்பை அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் திங்கள்கிழமை குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2012, 1:09 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் திங்கள்கிழமை குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பாசமுத்திரம் ஒன்றியம், வெள்ளங்குளி ஊராட்சியில் 7 வது வார்டுக்கு உட்பட்ட யாதவர் தெரு, பஜனை மடம் தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் இல்லையாம். ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்சாமி, ஊராட்சி ஒன்றிய தலைவரின் கணவர் ஆர்.எஸ். நல்லசிவன், ஊராட்சித் தலைவர் சிவகாமி, துணைத் தலைவர் வி. கங்காதரன், கிராம நிர்வாக அலுவலர் பியூலாதேவி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆனையப்பன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்களை கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.