குயின் ஈமு கோழி நிறுவன மேலாளர்கள் 2 பேர் கைது
ஈரோடு பெருந்துறை அருகே செயல்பட்டு வந்த குயின் ஈமு கோழி நிறுவன மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஈரோடு பெருந்துறை அருகே செயல்பட்டு வந்த குயின் ஈமு கோழி நிறுவன மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குயின் ஈமு கோழி நிறுவன பொது மேலாளர் கார்த்திகேயன் (27). இவர் செங்காளிப்பாளையம் விஜயமங்கலத்தைச் சேர்ந்தவர். இவருடன் மண்டல மேலாளர், புத்தூர் பொதுப்பாளையம் கதிராம்பட்டியைச் சேர்ந்த வினோத் (26) இன்று காலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் செய்யப்பட்டார்.
இவர்கள் மீது 367 பேர் புகார் கொடுத்துள்ளனர். ரூ.9.2 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில் இதுவரை கோழிப் பண்ணை மோசடி தொடர்பாக 40 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் தாமாக சரண் அடைந்துள்ளனர். 28 பேர் தலைமறைவாக உள்ளனர். 21 நிறுவனங்கள் மீது மோசடிப் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...