ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நித்தியானந்தா ஓரிரு நாளில் தன் முடிவினைச் சொல்வார்: சீடர்

மதுரை இளைய ஆதீன பட்டத்தில் இருந்து நித்தியானந்தா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மதுரை ஆதீனத்துக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நித்தியானந்தாவுக்கு நெருக்கமான சிலரும் இது குறித்து தகவல்களை வெளியிட்டனர்.

News image
Updated On :18 அக்டோபர் 2012, 3:24 pm

சரவண பெருமாள்

மதுரை இளைய ஆதீன பட்டத்தில் இருந்து நித்தியானந்தா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மதுரை ஆதீனத்துக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நித்தியானந்தாவுக்கு நெருக்கமான சிலரும் இது குறித்து தகவல்களை வெளியிட்டனர்.

தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், நித்தியானந்தா மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதீன மடத்தை அரசு ஏற்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு நெருக்கடி தரப்பட்டது. இதையடுத்து, அரசின் சார்பில் செயல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு, ஆதீன விவகாரங்களை கவனிக்கக் கூடும் என்றும் தகவல் உலா வந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, தன்னால் மேலும் மேலும் ஆதீனத்துக்கு சிக்கல் ஏற்படக்கூடாது என்று நித்தியானந்தா கருதியதாகவும், அதனால் அவராகவே முன்வந்து ஆதீன பட்டத்தில் இருந்து விலகி விடுவார் என்றும் ஆதீனத்தில் இருந்தவர்கள் கூறினர்.

இந்நிலையில், இது குறித்த செய்திகளுக்கு விடையளிக்கும் விதமாக, நித்தியானந்தா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் அதைத் தவிர்த்துவிட்டார். இதனால், சில தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் நித்தியானந்தாவைச் சந்தித்து விளக்கம் பெறா முயற்சி செய்தனர். ஆனால், நித்தியானந்தாவின் சீடர் பரமானந்தா வெளியில் வந்து, நித்தியானந்தர் இன்று சந்திக்க வாய்ப்பில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் நித்தியானந்தர் உங்களை சந்திப்பார். மேலும் ஆதீனம் இது குறித்து விளக்கம் அளிப்பார் என்றார்.

இருப்பினும், அரசு எடுத்துள்ள இந்த நிலையால், மதுரை ஆதீனம் மன வருத்தத்தில் இருப்பதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.